“அரசியல் ஆதாயத்துக்காக சாதிவாரி கணக்கெடுப்பு கூடாது” - ஆர்எஸ்எஸ் பிரமுகர் சுனில் கருத்து

By KU BUREAU

பாலக்காடு: கேரள மாநிலம் பாலக்காட்டில் ராஷ்டிரிய ஸ்வயம் சேவக் சங்கத்தின் (ஆர்எஸ்எஸ்) அகில இந்திய ஒருங்கிணைப்புக் கூட்டம் ஆக. 31-ம் தேதி தொடங்கி செப்டம்பர் 2 வரை நடைபெற்றது. இக்கூட்டத்தின் கடைசி நாளான நேற்று ஆர்எஸ்எஸ் அமைப்பின் செய்தித் தொடர்பளர் சுனில் அம்பேகர் தெரிவித்ததாவது: பின்தங்கிய சமூகங்கள் அல்லது சாதிகளில் சிறப்பு கவனம் தேவைப்படுபவர்களுக்கு அது நிச்சயம் வழங்கப்பட வேண்டும் என்பது ஆர்எஸ்எஸின் நிலைப்பாடு. ஆனால், அவர்களுக்கான குறிப்பிட்ட ஒதுக்கீட்டை வழங்க அரசுக்கு கணக்கீடுகள் தேவை. அதனை நன்கு நிறுவப்பட்ட நடைமுறை மூலம் மேற்கொள்வது அவசியம்.

இதற்கு முன்பும் அத்தகைய தரவுகளை அரசு எடுத்துள்ளது. அதனால் சாதிவாரி கணக்கெடுப்பை மீண்டும் நடத்த முடியும். ஆனால், அது அந்த சமூகங்கள் மற்றும் சாதிகளின் நலனுக்காக மட்டுமே செய்யப்பட வேண்டும். மாறாக அதனை தேர்தலுக்கான கருவியாக பயன்படுத்தக்கூடாது. அதனைக்கொண்டு தேர்தல்ஆதாயம் அடைய முற்படக்கூடாது.

இந்து சமூகத்துக்கு சாதி மற்றும் சாதி உறவுகள் என்பது உணர்வுப்பூர்வமான பிரச்சினை. இது நமது தேசிய ஒற்றுமைக்கும் ஒருமைப்பாட்டுக்கும் முக்கிய மான பிரச்சினை. எனவே, அதனைதேர்தல் அரசியலின் அடிப்படை யில் அணுகாமல், மிகவும் உணர்வுப்பூர்வமாக கையாளப்பட வேண்டியது அவசியம். இவ்வாறு சுனில் அம்பேகர் கூறினார்.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE