“ஜனநாயகத்தை பின்பற்றும் ஒரே கட்சி பாஜகதான்” - பிரதமர் மோடி பெருமிதம்

By KU BUREAU

புதுடெல்லி: இந்தியாவில் ஜனநாயக நடைமுறையை பின்பற்றும் ஒரே அரசியல் கட்சி என்றால் அது பாஜகதான் என்று பிரதமர் மோடி பெருமிதம் தெரிவித்துள்ளார்.

டெல்லியில் கட்சியின் உறுப்பினர் சேர்க்கை நிகழ்ச்சியில் நேற்று பங்கேற்ற பிரதமர் இதுகுறித்து கூறியதாவது: பாஜகவை பொருத்தவரை உறுப்பினர் சேர்க்கை என்பது நமது குடும்ப விரிவாக்கம் மட்டுமே. மற்ற கட்சிகளைப் போல வாரிசு அரசியல் பாஜகவிடம் கிடையாது. இந்தியாவில் ஜனநாயக நடைமுறைகளை பின்பற்றும் ஒரே அரசியல் கட்சி பாஜகதான்.

இந்தியாவின் ஒரே அரசியல் கட்சி தனது பணியை விரிவுபடுத்தும் அதே வேளையில் ஜனநாயக செயல்முறையைப் பின்பற்றி, மக்களின் எதிர்பார்ப்புகளுக்கு ஏற்ப தன்னை மேம்படுத்திக் கொள்கிறது. பாரதிய ஜனசங்கம் முதல் தற்போது வரைநாட்டில் புதிய அரசியல் கலாச்சாரத் துக்கு எடுத்துக்காட்டாக விளங்க அனைத்து முயற்சிகளையும் மேற்கொண்டுள்ளோம்.

மக்கள் அதிகாரம் அளிக்கும் அமைப்பு அல்லது அரசியல் கட்சி அதன் ஜனநாயக விழுமியங்களை பின்பற்றவில்லை என்றாலோ அல்லது அதன் உள் ஜனநாயகம் வாழவில்லை என்றாலோ இன்றுபல அரசியல் கட்சிகள் எதிர்கொள்ளும் சூழ்நிலைதான் உருவாகியிருக்கும். இவ்வாறு பிரதமர் மோடி பேசினார்.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE