கோவை மாவட்டத்தில் காதலியின் மகளிடம் பாலியல் சீண்டலில் ஈடுபட்ட காதலனையும், உடந்தையாக இருந்த தாயையும் போலீஸார் கைது செய்து சிறையில் அடைத்தனர்.
கோவை மாவட்டம் சூலூர் அருகே உள்ள காங்கேயம் பாளையத்தை சேர்ந்தவர் மஞ்சுளா. இவர் சென்னையில் தனியார் பத்திரிக்கை நிறுவனத்தில் பணியாற்றி வரும் பால் பிரவீன் என்பவருடன் பழகி வந்துள்ளார்.
இந்நிலையில் சில நாட்களுக்கு முன் காங்கேயம் பாளையத்தில் உள்ள மஞ்சுளாவின் வீட்டிற்கு வந்துள்ளார் பால் பிரவீன். அங்கு 9ம் வகுப்பு படித்து வரும் மஞ்சுளாவின் மகளிடம், வீட்டில் யாரும் இல்லாத நேரத்தில் பாலியல் சீண்டலில் ஈடுபட்டுள்ளார்.
இதனால் பயந்து போன மாணவி, பால் பிரவீனின் செய்கை குறித்து தனது பாட்டியிடம் கதறியழுத படியே தெரிவித்துள்ளார். இதையடுத்து பால் பிரவீன் மீது சூலூர் காவல் நிலையத்தில் புகார் அளித்தார். புகாரினை தொடர்ந்து அந்த சிறுமியிடம் போலீஸார் நடத்திய விசாரணையில் பால் பிரவீன் பாலியல் சீண்டலில் ஈடுபட்டது உறுதியானது.
இதனை தொடர்ந்து பால் பிரவீனையும், அவருக்கு உடந்தையாக இருந்த சிறுமியின் தாய் மஞ்சுளாவையும் போலீஸார் கைது செய்து நீதிமன்றத்தில் ஆஜர் செய்து சிறையில் அடைத்தனர். காதலியின் மகளிடமே பாலியல் சீண்டலில் ஈடுபட்ட பால் பிரவீனின் செயலும், அதற்கு சொந்த தாயும் உடந்தையாக இருந்தது சூலூர் பகுதி மக்களிடையே அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.