இந்தியாவின் மதிப்பு மிக்க மனிதர்களில் ஒருவரான பிரித்விராஜ் சிங் ஓபராய் இன்று காலை காலமானார். அவருக்கு வயது 94.
இந்தியாவிலேயே 3வது மிகப்பெரிய நடத்திர ஓட்டல் நிறுவமான ஓபராய் ஓட்டல் மற்றும் ரெஸார்ட் நிறுவனத்தின் தலைவராக இருந்தவர் பிரித்விராஜ் சிங் ஓபராய். அத்துடன் இந்தியாவின் மதிப்பு மனிதர்களுள் ஒருவராகவும், இந்தியாவில் ஓட்டல் தொழிலுக்கே புதிய வடிவத்தை அளித்தவர் என்றும் புகழப்படுகிறார். இந்நிலையில், இன்று காலை அவர் வயது மூப்பின் காரணமாக உயிரிழந்தார்.
இவரை கவுரவிக்கும் விதமாக இந்திய அரசு கடந்த 2008-ம் ஆண்டு, நாட்டின் இரண்டாவது உயரிய விருதான பத்ம விபூஷண் வழங்கியது. அத்துடன் பல சர்வதேச விருதுகளையும் அவர் பெற்றுள்ளார். கடந்த 2010-ம் ஆண்டு தி ஓட்டல்ஸ், ஓபராயை இந்திய ஓட்டல் நிறுவனங்களின் தந்தை என்று புகழாரம் சூட்டி கட்டுரை எழுதியிருந்தது. இவரது வருகைக்கு பிறகே இந்தியாவில் மதிப்புமிக்க, உயர்ரக நட்சத்திர ஓட்டல்கள் இந்தியாவில் வந்ததாகவும் அந்த கட்டுரையும் குறிப்பிடப்பட்டிருந்தது.
வயது மூப்பின் காரணமாக பிரித்விராஜ் சிங் ஓபராய் கடந்த 2022 மே மாதம் இஐஎச் என்ற தனது ஓட்டல் நிறுவனத்தின் தலைவர் மற்றும் இயக்குநர் பொறுப்பில் இருந்து விலகியிருந்தார். அவரது இழப்பு ஓபராய் குழுமத்திற்கு பெரும் இழப்பு என்று அவரது மகன்களாக விவேக் மற்றும் அர்ஜூன் ஓபராய் ஆகியோர் தெரிவித்துள்ளனர்.