தாராவி மறுசீரமைப்பு திட்டத்துக்கு அரசு சாரா தொண்டு நிறுவனங்கள் ஆதரவு

By KU BUREAU

மும்பை: மகாராஷ்டிர மாநிலம் தாராவி மறுசீரமைப்பு திட்டம் அதானி குழுமத்தால் 3 பில்லியன் டாலர் மதிப்பில் செயல்படுத்தப்பட உள்ளது. இந்த திட்டத்தை மகாராஷ்டிராவின் தாராவி மறுவடிவமைப்பு திட்டம்/ குடிசை மறுவாழ்வு ஆணையம் (டிஆர்பி/எஸ்ஆர்ஏ) மேற்பார்வையிட உள்ளது.

தாராவி குடியிருப்பாளர்களுக்கான இந்த இடமாற்ற திட்டத்தின் மூலம் 2000-ம் ஆண்டு ஜனவரி 1 அல்லது அதற்கு முன்பாக இங்கு குடியிருப்புகளை வைத்திருப்பவர்கள் பயன்பெறுவார்கள். தற்போது தரைதளத்தில் வசித்து வரும் தாராவி மக்கள் இந்த திட்டத்தின் வாயிலாக இலவசமாக 350 சதுர அடி அடுக்குமாடி குடியிருப்பைப் பெறுவர். 2000ஜனவரி 1 மற்றும் 2011 ஜனவரி 1-க்கு இடையில் தாராவியில் குடியேறியவர்கள் ஆவாஸ் யோஜனா திட்டத்தின் மூலம் ரூ.2.5லட்சம் செலுத்தினால் அவர்களுக்கும் வீடுகள் ஒதுக்கப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதுகுறித்து இந்த திட்டத்தை பார்வையிடும் மகாராஷ்டிர ஆணையத்துக்கு தொண்டு நிறுவனங்கள் எழுதியுள்ள கடிதத்தில் கூறியுள்ளதாவது: தாராவியில் மறுமேம்பாட்டு வளர்ச்சி தொடர்பாக 2024 மார்ச் 18 அன்று தொடங்கிய கணக்கெடுப்பில் இதுவரையில் 11,000 குடியிருப்புகளுக்கு வீடுவீடாக சென்று கணக்கெடுக்கும் பணி நடைபெற்றுள்ளது. தாராவியில் உள்ள மிகப் பெரிய தமிழ் சமூகத்தை பிரதிநிதித்துவப்படுத்தும் அமைப்புகள் மற்றும்அரசு சாரா தன்னார்வ நிறுவனங்கள் தாராவி மறு சீரமைப்பு நடவடிக்கைக்கு ஆதரவு தெரிவித்துள்ளதுடன், அங்கு தொடர்ந்து வணிகத்தை நடத்தவும் ஆவலுடன்இருப்பதையும் வெளிப்படுத்தி யுள்ளன. இவ்வாறு அந்த கடிதத்தில் தெரிவிக்கப்பட்டுள்ளது

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE