கல்வி வளர்ச்சி நாளில் நூலகங்களுக்கு 7,740 புத்தகங்களை வழங்கும் முதல்வர் ஸ்டாலின்!

By காமதேனு

பெருந்தலைவர் காமராஜர் பிறந்த நாளான கல்வி வளர்ச்சி நாளான நாளை ( ஜூலை 15) நடைபெறவுள்ள விழாவில், முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தனக்கு வழங்கப்பட்ட 7,740 புத்தகங்களை தமிழ்நாடு அரசின் பொது நூலகங்களுக்கு வழங்குகிறார்.

இது தொடர்பாக தமிழ்நாடு அரசு வெளியிட்டுள்ள அறிக்கையில், “சென்னை, நங்கநல்லூர்‌, நேரு அரசு ஆண்கள்‌ மேல்நிலைப்‌ பள்ளியில்‌ பெருந்தலைவர்‌ காமராஜரின்‌ பிறந்த நாளான கல்வி வளர்ச்சி நாளில்‌ (15.7.2023) நடைபெற உள்ள விழாவில்‌, முதலமைச்சர் மு.க. ஸ்டாலின்‌ தனக்கு வழங்கப்பெற்ற 7,740 புத்தகங்களை தமிழ்நாடு அரசின்‌ பொது நூலகங்களுக்கு வழங்குகிறார்‌.

முதலமைச்சர் மு.க. ஸ்டாலின்‌, கடந்த 2017-ஆம்‌ ஆண்டு திமுகவின்‌ செயல்‌ தலைவராக பொறுப்பேற்றதிலிருந்தும்‌, 2021-ம்‌ ஆண்டு தமிழ்நாடு முதலமைச்சராக பொறுப்பேற்றப்‌ பிறகும்‌, தண்னைச்‌ சந்திக்க வருபவர்கள்‌, பூங்கொத்துகள்‌, பொன்னாடைகளைத்‌ தவிர்த்து, அன்பின்‌ பரிமாற்றத்திற்கு அடையாளமாக புத்தகங்களை வழங்குமாறு வேண்டுகோள்‌ விடுத்திருந்தார்‌.

அதன்படி, தன்னைச்‌ சந்திக்க வந்த பலரும்‌ வழங்கிய ஒன்றரை லட்சம்‌ அறிவார்ந்த புத்தகங்களை தமிழ்நாட்டில்‌ உள்ள பல்வேறு நூலகங்களுக்கும்‌, புத்தகங்கள்‌ கோரிக்‌ கடிதம்‌ அளித்தவர்களுக்கும்‌, அமைப்புகளுக்கும்‌‌ வழங்கியுள்ளார்‌.

அதன்‌ தொடர்ச்சியாக, பெருந்தலைவர்‌ காமராஜரின்‌ பிறந்த நாளான கல்வி வளர்ச்சி நாளையொட்டி சென்னை, நங்கநல்லூர்‌, நேரு அரசு ஆண்கள்‌ மேல்நிலைப்‌ பள்ளியில் நாளை‌ நடைபெற உள்ள விழாவில்‌ முதலமைச்சர்‌, சமீபகாலங்களில்‌ தனக்கு வழங்கப்பட்ட 7,740 புத்தகங்களை, தமிழ்நாடு அரசின்‌ பொது நூலகங்களுக்கு வழங்குகிறார்‌.” எனக் கூறப்பட்டுள்ளது.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE