மும்பை: உலகலாவிய சந்தைகளின் சாதகமான போக்கு மற்றும் இந்தியாவின் 2024 வளர்ச்சி விகிதத்தை 7.2 சதவீதமாக திருத்தும் முடிவு காரணமாக இந்திய பங்குச்சந்தைகள் இன்று (ஆக.30) புதிய உச்சத்துடன் தொடங்கின.
காலை 9.20 மணியளவில் சென்செக்ஸ் 502.42 புள்ளிகள் உயர்ந்து 82,637.03 ஆக இருந்தது. அதே நேரத்தில் நிஃப்டி 87.45 புள்ளிகள் உயர்ந்து 25,239.40 ஆக இருந்தன.
ரிலைன்ஸ் இண்டஸ்ட்ரீஸ்கான செயற்கை நுண்ணறிவை (ஏஐ) மையப்படுத்தப்பட்ட மூலோபாயம், வெளிநாட்டு நிறுவன முதலீட்டாளர்களின் வலுவான வாங்குதல் மற்றும் அமெரிக்காவின் ஜிடிபி தரவுகள் போன்றவையும் குறியீடுகள் உயர கூடுதல் காரங்களாக அமைந்தன.
இதுகுறித்து நிபுணர்கள் கூறும்போது, "பங்குச்சந்தைகள் கடந்த 11 அமர்வுகளில் சீராக ஏற்றம் கண்டுவருகிறது. உள்நாட்டு நிறுவன முதலீட்டாளர்கள் (டிஐஐ), ஹெச்என்ஐகள் மற்றும் வெளிநாட்டு நிறுவன முதலீட்டாளர்கள் தங்களின் விற்பனையை குறிப்பிடத்தக்க அளவில் குறைத்துக்கொண்டு குறிப்பிட்ட நாளில் வாங்குவதை அதிகப்படுத்தியதும் சந்தைகளின் மறுமலர்ச்சிக்கு உதவி இருக்கிறது.
» மருத்துவ உபகரணங்களை உள்நாட்டிலேயே தயாரிக்க மத்திய அரசு ஊக்கத் தொகை
» குஜராத் வெள்ளத்தில் தத்தளித்த 33 பேர் ஹெலிகாப்டர் மூலம் மீட்பு
சந்தையின் இந்த நெருங்கிய கால போக்கு தொடர வாய்ப்புள்ளது. வங்கிப்பங்குகள் அதிக அளவில் வாங்கப்பட்டால் சந்தைகளின் தற்போதைய போக்கில் மாற்றம் ஏற்படலாம். ஆனால், வங்கி அமைப்பில் நிலவி வரும் டெபாசிட்களுக்கான போராட்டம் அதன் விளைவாக ஏற்படும் அச்சம் போன்றவை வங்கிப் பங்குகளை வாங்குவதற்கான கவர்ச்சியை மட்டுப்படுத்தியுள்ளன. லார்ஜ்- கேம்ஸ் பரந்த சந்தையை விட சிறப்பாக செயல்படுகின்றன. இது ஒரு ஆரோக்கியமான போக்கு" இவ்வாறு தெரிவித்தனர்.