ஜம்மு காஷ்மீரில் நடந்த தனித்தனி என்கவுன்டரில் 3 தீவிரவாதிகள் சுட்டுக்கொலை

By KU BUREAU

ஸ்ரீநகர்: ஜம்மு காஷ்மீர் மாநிலம் குப்வாரா பகுதியில் உள்ள எல்லைக்கட்டுப்பாட்டு கோடு அருகே மேற்கொள்ளப்பட்ட தனித்தனி தீவிரவாத எதிர்ப்பு நடவடிக்கைகளில் 3 தீவிரவாதிகள் சுட்டுக்கொல்லப்பட்டதாக ராணுவம் வியாழக்கிழமை தெரிவித்துள்ளது. உளவுத்துறையின் தகவல்களைத் தொடர்ந்து மச்சேல் மற்றும் தங்தார் பகுதிகளில் புதன்கிழமை இந்த தீவிரவாத எதிப்பு நடவடிக்கைத் தொடங்கியது.

இதுகுறித்து ஸ்ரீநகரை அடிப்படையாக கொண்ட சினார் கார்ப்ஸ் அதன் எக்ஸ் பக்கத்தில் வெளியிட்டுள்ள பதிவில், "ஊடுருவல் குறித்த உளவுத்துறையின் தகவல்களைத் தொடர்ந்து இந்திய ராணுவம் ஜம்மு காஷ்மீர் போலீஸாருடன் இணைந்து ஆகஸ்ட் 28, 29 இரவுகளில், மச்சல், குப்வாராவின் பகுதிகளில் ஒரு கூட்டு நடவடிக்கையில் ஈடுபட்டது.

மோசமான வானிலையிலும் சந்தேகத்துக்கு உரிய ஆட்களின் நடமாட்டங்கள் உணரப்பட்டது. உடனடியாக ராணுவத்தினர் துப்பாக்கிச் சூட்டில் ஈடுபட்டனர். இதில் இரண்டு தீவிரவாதிகள் சுட்டுக்கொல்லப்பட்டுள்ளனர் என்று நம்பப்படுகிறது." என்று தெரிவித்துள்ளது.

அதேபோல், தங்தார் எல்லைக்கட்டுப்பாட்டு கோடு அருகே நடந்த மற்றொரு துப்பாக்கிச்சூடு சம்பவத்தில் தீவிரவாதி ஒருவர் கொல்லப்பட்டதாக இந்திய ராணுவம் தெரிவித்துள்ளது.

இந்த அறிக்கைகள் கிடைத்த போது துப்பாக்கிச்சூடு தொடர்ந்து நடத்து கொண்டிருந்தது என்றும் ராணுவம் தெரிவித்திருந்தது.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE