இந்தியாவின் தேசிய விளையாட்டாக ஹாக்கி இருந்து வந்தாலும், அதிகளவில் ரசிகர்களை ஈர்க்கும் விளையாட்டாக கிரிக்கெட் இருந்து வருகிறது. கிரிக்கெட் விளையாட்டின் கடவுளாக சச்சினைக் கொண்டாடி வந்த தேசத்தில், அடுத்தடுத்த தலைமுறையினர் தோனி, வீராட் என்று கிரிக்கெட் விளையாட்டின் மீதான ஆர்வத்தைத் தொடர்ந்து வருகின்றனர்.
இந்திய கிரிகெட் அணியினரைப் போலவே இந்தியாவில், மகளிர் கிரிகெட் அணியினரும் உலகளவில் போட்டிகளில் கவனம் ஈர்த்து வருகின்றனர். இந்நிலையில், ஹைதராபாத் பெண்கள் கிரிக்கெட் அணியின் தலைமை பயிற்சியாளராக பதவி வகித்து வரும் வித்யூத் ஜெய்சிம்ஹா, தனது அணியினருடான பேருந்து பயணத்தின் போதே, பேருந்தில் அமர்ந்தபடி மது அருந்தும் வீடியோ வெளியாகி பலத்த சர்ச்சையைக் கிளப்பியிருக்கிறது.
கடந்த பிப்ரவரி 15ம் தேதி, தலைமை பயிற்சியாளர் வித்யூத் ஜெய்சிம்ஹா ஹைதராபாத்தில் தனது அணியினருடன் பேருந்தில் சென்று கொண்டிருந்த போது, பேருந்திற்குள்ளேயே மதுபானம் அருந்திய வீடியோ வாட்ஸ் அப் வெளியாகி, சமூக வலைத்தளங்களிலும் வைரலானது.
பேருந்து இருக்கையில், பயிற்சியாளர் வித்யூத் ஜெய்சிம்ஹாவுக்கு பக்கவாட்டில் இருந்தவர் இந்த வீடியோவை எடுத்துள்ள நிலையில், தலைமை பயிற்சியாளர் வித்யூத்துக்கு எதிராக கண்டனங்கள் குவிந்து வருகின்றன.
வித்யூத் ஜெய்சிம்ஹாவின் இந்த செயலுக்கு கண்டனம் தெரிவித்துள்ள ஹைதராபாத் கிரிக்கெட் சங்கம், இது குறித்து விசாரணைக்கு உத்தரவிட்டு, விசாரணை நடைபெற்று முடியும் வரை அணியின் அனைத்து செயல்பாடுகளில் இருந்து தாமாக முன்வந்து விலகி இருக்குமாறு வித்யூத் ஜெய்சிம்ஹாவுக்கு உத்தரவிட்டுள்ளது.
இதையும் வாசிக்கலாமே...
‘ஜோக்கர் இப்போ ஹீரோவானேன்...’ நடிகர் சிவகார்த்திகேயன் பிறந்தநாள் ஸ்பெஷல்!
மிஸ் பண்ணிடாதீங்க... இன்று 17 மாவட்டங்களில் மாபெரும் வேலைவாய்ப்பு முகாம்!
டெஸ்ட் போட்டியில் இருந்து திடீரென விலகிய அஸ்வின்... ஐசிசி விதியால் சிக்கலில் இந்திய அணி!
அதிர்ச்சி வீடியோ... யானையை காரில் துரத்திய அதிமுக பிரமுகர்: ரூ.1 லட்சம் அபராதம் விதித்த வனத்துறை!
அதிமுக ஆட்சியில் அனைத்து பெண்களுக்கும் மகளிர் உரிமைத்தொகை - எஸ்.பி.வேலுமணி உறுதி!