தொடரும் கனமழையால் இடிந்து விழுந்த மருத்துவமனை சுவர்: கேரளாவில் வைரலாகும் வீடியோ

By காமதேனு

கேரளாவில் விடிய விடிய பெய்த கனமழையால் கோழிக்கோடு பகுதியில் மருத்துவமனை கட்டிடத்தின் சுற்றுச்சுவர் இடிந்து விழுந்தது. அப்போது அப்பகுதியில் இருந்து பொதுமக்கள் உயிர் தப்பிய வீடியோ வைரலாகி வருகிறது.

தென் மேற்கு பருவமழை காரணமாக கேரளாவில் கனமழை தொடர்ந்து பெய்து வருகிறது. இதன் காரணமாக 11 மாவட்ட பள்ளிகளுக்கு இன்று விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. 12 மாவட்டங்களுக்கு ஆரஞ்சு அலர்ட் விடப்பட்டுள்ளது.

இந்த நிலையில், கோழிக்கோடு பகுதியில் நேற்று விடிய விடிய மழை பெய்தது. வடகரை பகுதியில் உள்ள மாவட்ட அரசு தலைமை மருத்துவமனை கட்டிடத்தின் சுற்றுச்சுவர் இடிந்து விழுந்தது. புதிதாக கட்டப்பட்ட கட்டிடத்தின் பின்பக்க சுவர் இடிந்து விழுந்த நிலையில் பொதுமக்கள் அதிர்ஷ்டவசமாக உயிர் தப்பினர்.

இங்கு வாகனங்கள் நிறுத்தப்படாமல் இருந்தால் பெரும் விபத்து தவிர்க்கப்பட்டது. இந்த நிலையில் மண் மற்றும் கற்கள் சாலையில் விழுந்ததால், இவ்வழியாக வாகனப் போக்குவரத்து தடைபட்டது. தொடர்ந்து சுவர் இடிந்து விழும் காட்சி சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.

VIEW COMMENTS