ஹரியாணாவில் புதிய கூட்டணி: துஷ்யந்த் சௌதாலாவுடன் கைகோத்தார் சந்திரசேகர் ஆசாத்!

By KU BUREAU

புதுடெல்லி: ஹரியாணாவில் ஜனநாயக் ஜனதா கட்சியும் (ஜேஜேபி) சந்திரசேகர் ஆசாத்தின் ஆசாத் சமாஜ் கட்சியும் (கன்ஷி ராம்) கூட்டணி அமைத்து போட்டியிடுவதாக அறிவித்துள்ளன. ஹரியானாவில் உள்ள 90 சட்டமன்ற தொகுதிகளுக்கு அக்டோபர் 1ம் தேதி தேர்தல் நடைபெறவுள்ளது.

ஆசாத் சமாஜ் கட்சியுடனான கூட்டணியை ஜனநாயக் ஜனதா கட்சி தலைவர் துஷ்யந்த் சவுதாலா இன்று அறிவித்தார். துஷ்யந்த் சவுதாலா மற்றும் சந்திர சேகர் இருவரும் விவசாயிகளின் உரிமைகள் மற்றும் மக்கள் நலனுக்காக போராடுவதாகவும், இளைஞர்களின் அரசாங்கம் அமைக்க உள்ளதாக இக்கூட்டணியினர் தெரிவித்துள்ளனர்.

ஹரியாணாவில் உள்ள 90 இடங்களில், துஷ்யந்த் சௌதாலாவின் ஜேஜேபி 70 இடங்களிலும், ஆசாத் சமாஜ் கட்சி மீதமுள்ள 20 இடங்களில் போட்டியிடும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

சட்டமன்றத் தேர்தலுக்கு முன்னதாக ஜேஜேபி-க்கு ஏற்பட்ட பின்னடைவில், அதன் நான்கு சட்டமன்ற உறுப்பினர்களும் அனைத்துக் கட்சிப் பதவிகள் மற்றும் தங்களது எம்எல்ஏ பதவிகளில் இருந்து சனிக்கிழமை ராஜினாமா செய்தனர். ஜேஜேபியின் மொத்தம் உள்ள 10 சட்டமன்ற உறுப்பினர்களில் 6 பேர் கட்சியை விட்டு வெளியேறியுள்ளனர். இப்போது துஷ்யந்த் சௌதாலா, நைனா சௌதாலா (துஷ்யந்தின் தாய்), அமர்ஜித் தண்டா ஆகிய மூன்று சட்டமன்ற உறுப்பினர்கள் மட்டுமே கட்சியில் உள்ளனர்

ஹரியாணாவில் ஆட்சியில் இருக்கும் பாஜக நடைபெறவுள்ள சட்டமன்றத் தேர்தலில் தொடர்ந்து மூன்றாவது முறையாக ஆட்சியைப் பிடிக்க முயற்சி செய்கிறது. அதே நேரத்தில் காங்கிரஸ் கட்சியும் ஆட்சியை கைப்பற்ற போராடி வருகிறது. ஹரியாணாவில் வாக்குப்பதிவு அக்டோபர் 1-ஆம் தேதியும், வாக்கு எண்ணிக்கை அக்டோபர் 4-ஆம் தேதியும் அறிவிக்கப்படும்.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE