தக்காளியின் விலை 130 ரூபாயாக அதிகரிப்பு; விலைவாசி உயர்வால் வேதனையில் தவிக்கும் மக்கள்

By காமதேனு

சென்னையில் ஒரு கிலோ தக்காளியின் விலை 130 ரூபாயாக அதிகரித்துள்ளதால் பொதுமக்கள் அதிர்ச்சியடைந்துள்ளனர். தக்காளி மட்டுமல்லாமல் மற்ற காய்கறிகளின் விலையும் கடுமையாக உயர்ந்துள்ளது.

தமிழகத்தில் கடந்த சில வாரங்களாகவே காய்கறிகளின் விலை மளமளவென உயர்ந்து வருகிறது. சென்னையில் இன்று ஒரு கிலோ தக்காளி 130 ரூபாய்க்கும், மதுரையில் ஒரு கிலோ தக்காளி 110 ரூபாய்க்கும் விற்பனையாகிறது. அதேபோல மற்ற மாவட்டங்களிலும் 80 முதல் 110 ரூபாய் வரை தக்காளியின் விலை தடாலடியாக உயர்ந்துள்ளது. உணவில் அத்தியாவசிய பொருட்களான தக்காளி, சின்ன வெங்காயம், பச்சை மிளகாய், இஞ்சி போன்றவற்றின் விலை கடுமையாக உயர்ந்துள்ளது அதிர்ச்சியை உருவாக்கியுள்ளது.

பிப்ரவரி மாதம் ஒரு கிலோ தக்காளியின் விலை 10 ரூபாயாகவும், சின்ன வெங்காயம் விலை 30 ரூபாயாகவும், இஞ்சியின் விலை ரூ.40 ஆகவும், பச்சை மிளகாய் 10 ரூபாயாகவும், பீன்ஸ் விலை 20 ரூபாயாகவும் இருந்தது. ஆனால் இப்போது தக்காளியின் விலை 100 ரூபாயாகவும், சின்ன வெங்காயம் விலை 80 ரூபாயாகவும், இஞ்சியின் விலை ரூ.200 ஆகவும், பச்சை மிளகாய் விலை 85 ரூபாயாகவும், பின்ஸ் விலை 120 ரூபாயாகவும் உள்ளது. வழக்கமாக மழைக்காலங்களில்தான் காய்கறிகளின் விலை அதிகரிக்கும். இப்போது கோடை காலத்திலேயே காய்கறிகளின் விலை கடுமையாக உயர்ந்துள்ளது மக்களிடம் அதிர்ச்சியை உருவாக்கியுள்ளது.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE