ஜம்மு காஷ்மீரில் ஆம் ஆத்மி தனித்துப் போட்டி: முதல்கட்ட வேட்பாளர் பட்டியல் வெளியீடு!

By KU BUREAU

புதுடெல்லி: ஜம்மு காஷ்மீர் சட்டப்பேரவைத் தேர்தலுக்கான 7 வேட்பாளர்கள் அடங்கிய முதல்கட்ட பட்டியலை ஆம் ஆத்மி கட்சி வெளியிட்டுள்ளது.

ஆம் ஆத்மி கட்சி சார்பில் புல்வாமாவில் இருந்து ஃபயாஸ் அகமது சோபி, ராஜ்போராவில் முதாசிர் ஹாசன், தேவ்சார் தொகுதியில் ஷேக் ஃபிதா ஹுசைன் ஆகியோர் போட்டியிடுகின்றனர். தூர் தொகுதியில் மொஹ்சின் ஷஃப்கத் மிர், தோடா தொகுதியில் மெஹ்ராஜ் தின் மாலிக், தோடா மேற்கு தொகுதியில் யாசிர் ஷஃபி மாட்டோ, பனிஹால் தொகுதியில் முசாசிர் அஸ்மத் மிர் ஆகியோர் வேட்பாளர்களாக அறிவிக்கப்பட்டுள்ளனர்.

செப்டம்பர் 18, 25 மற்றும் அக்டோபர் 1 ஆகிய தேதிகளில் மூன்று கட்டங்களாக நடைபெற உள்ள ஜம்மு காஷ்மீர் மாநிலத்தில், ஆம் ஆத்மி கட்சி முதல் முறையாக சட்டசபைத் தேர்தலில் போட்டியிடுகிறது. இதற்கிடையில், குலாம் நபி ஆசாத்தின் ஜனநாயக முற்போக்கு ஆசாத் கட்சியும் 13 வேட்பாளர்களின் முதல்கட்ட பட்டியலை அறிவித்துள்ளது.

காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி மற்றும் அக்கட்சியின் தலைவர் மல்லிகார்ஜுன் கார்கே ஆகியோர் தேசிய காங்கிரஸ் தலைவர் ஃபரூக் அப்துல்லாவை சந்தித்த பின்னர் தேர்தலுக்கு முந்தைய கூட்டணி அறிவிக்கப்பட்டது. கூட்டத்திற்குப் பிறகு, சட்டமன்றத் தேர்தலில் காங்கிரஸ்-என்சி கூட்டணி 90 தொகுதிகளிலும் போட்டியிடும் என்று பரூக் அப்துல்லா கூறினார்.

அதே நேரத்தில் சட்டசபை தேர்தலில் பரூக் அப்துல்லாவின் தேசிய மாநாட்டு கட்சியுடன், காங்கிரஸ் கூட்டணி அமைத்துள்ளது.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE