குட்நியூஸ்; மாதம் ரூ.62,000 சம்பளத்தில் மத்திய அரசு வேலை: விண்ணப்பிக்க நாளை கடைசி நாள்!

By காமதேனு

மத்திய அரசு நிறுவனமான ஹிந்துஸ்தான் சால்ட்ஸ் லிமிடெட் நிறுவனத்தில் காலியாக உள்ள 15 பணியிடங்களுக்கு விண்ணப்பிக்க நாளை(நவ.5) கடைசி நாள் என அறிவிக்கப்பட்டுள்ளது.

வேலைவாய்ப்பு

ஹிந்துஸ்தான் சால்ட்ஸ் லிமிடெட்டானது தற்போது வெளியிட்டுள்ள அறிவிப்பில், பொது மேலாளர், கூடுதல் பொது மேலாளர், துணை பொது மேலாளர், தலைமை மேலாளர், துணை கண்காணிப்பாளர் உள்ளிட்ட பணிகளுக்கென 15 காலிப்பணியிடங்கள் ஒதுக்கப்பட்டுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

வயது வரம்பு: இப்பணிக்கு விண்ணப்பிக்கும் விண்ணப்பதாரர்களின் வயதானது 28 முதல் 52 ஆக இருக்க வேண்டும். வயது வரம்பில் அளிக்கப்பட்டுள்ள தளர்வுகளுக்கு அதிகாரப்பூர்வ அறிவிப்பை பார்வையிடவும்.

கல்வித் தகுதி: விண்ணப்பிக்க ஆர்வம் உள்ள விண்ணப்பதாரர்கள் அரசால் அங்கீகாரம் பெற்ற பல்கலை கழகத்தில் பணி சார்ந்த துறையில் பட்டம் பெற்றிருக்க வேண்டும் என எதிர்பார்க்கப்படுகிறது.

ஊதியம்: பணிபுரிய விரும்பும் விண்ணப்பதாரர்களுக்கு மாதம் ரூ.20,100/- முதல் ரூ.62,000/- வரை ஊதியமாக வழங்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

அறிவிக்கை

விண்ணப்பிக்கும் முறை:

விண்ணப்பதாரர்கள் நேர்காணல் மூலம் தேர்வு செய்யப்படுவார்கள். மேற்கண்ட விவரங்களுக்கு அதிகாரபூர்வ அறிவிப்பை பார்வையிடவும். விண்ணப்பிக்க தகுதியான விண்ணப்பதாரர்கள் அதிகாரபூர்வ தளத்திற்கு சென்று விண்ணப்ப படிவம் பெற்று பூர்த்தி செய்து, ஆன்லைன் மூலம் விரைவாக விண்ணப்பிக்குமாறு அறிவுறுத்தப்படுகிறார்கள்.

இதையும் வாசிக்கலாமே...

மிஸ் பண்ணாதீங்க... இன்றும், நாளையும் வாக்காளர் பெயர் சேர்க்க, திருத்த தமிழகம் முழுவதும் சிறப்பு முகாம்!

நாளை இரவு வரை 66 ரயில்கள் ரத்து... பயணத்தை திட்டமிட்டுக்கோங்க!

அதிர்ச்சி... கழுத்தில் காயங்களுடன் பிரபல நடிகை உயிரிழப்பு! மர்ம மரணமாக வழக்குப்பதிவு!

அதிகளவு பூச்சிக்கொல்லி மருந்துடன் ஏலக்காய்... சபரிமலையில் 6,65,000 அரவணை பாயாச டின்களை அழிப்பு!

திருச்சியில் அடுத்தடுத்து 6 வாகனங்கள் மோதி பயங்கர விபத்து!

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE