ஹேமந்த் சோரன் வழக்கில் தொடர்பில்லாதவற்றை விசாரிக்கிறது அமலாக்கத் துறை... நீதிமன்றத்தில் கபில்சிபல் குற்றச்சாட்டு!

By காமதேனு

ஜார்க்கண்ட் முன்னாள் முதல்வர் ஹேமந்த் சோரன் வழக்கில் தொடர்பில்லாத விஷயங்களை அமலாக்கத் துறை விசாரித்து வருவதாக நீதிமன்றத்தில் மூத்த வழக்கறிஞர் கபில்சிபல் குற்றம்சாட்டினார்.

நில மோசடி தொடர்பான சட்டவிரோத பணப் பரிவர்த்தனை வழக்கில் ஜார்க்கண்ட் முன்னாள் முதல்வர் ஹேமந்த் சோரன் கடந்த ஜனவரி 31ம் தேதி கைது செய்யப்பட்டார். அமலாக்கத்துறை தனது முதல் குற்றச்சாட்டில், முன்னாள் முதல்வர் ஹேமந்த் சோரன், சட்டவிரோதமாக நிலம் வாங்கி விற்கும் ஒரு சிண்டிகேட்டின் ஒரு பகுதியாக உள்ளார் எனத் தெரிவித்திருந்தது.

இரண்டாவது குற்றச்சாட்டில், ஹேமந்த் சோரனுக்கும், அவரது கூட்டாளி பினோத் சிங்கிற்கும் இடையே நடந்த வாட்ஸ்அப் தகவல் பரிமாற்றங்கள் மூலம் பணியிட மாற்றம் தொடர்பாக பெரிய அளவிலான பணப் பரிமாற்றம் நடந்துள்ளதாகவும் அமலாக்கத் துறை தெரிவித்துள்ளது.

இந்நிலையில், இந்த வழக்கு ஜார்க்கண்ட் உயர்நீதிமன்றத்தில் பொறுப்பு தலைமை நீதிபதி சந்திரசேகர், நீதிபதி அருண் குமார் ராய் ஆகியோர் அடங்கிய அமர்வு முன்பு இன்று விசாரணைக்கு வந்தது.

அமலாக்கத் துறை

அப்போது, ஹேமந்த் சோரன் சார்பில் மூத்த வழக்கறிஞர் கபில்சிபல் ஆஜராகி வாதிட்டதாவது: பதவியில் இருந்த ஒரு முதல்வர் கைது செய்யப்பட்டார். நாம் இங்கு சுதந்திரத்தைப் பற்றிப் பேசுகிறோம். இது மிகவும் கவலையளிக்கிறது. அமலாக்கத் துறை இப்போது தொடர்பில்லாத விஷயங்களில் தலையிட்டு வருகிறது. நில உரிமை தொடர்பான வழக்கில் ஹேமந்த் சோரன் கைது செய்யப்பட்டார். அமலாக்கத்துறை குற்றம் சாட்டிய நிலத்தின் ஒரு பகுதியை ஹேமந்த் சோரன் தனக்குச் சொந்தமாக்கிக் கொண்டதாக காட்டும் எந்த ஆவணங்களும் இல்லை.

ஹேமந்த் சோரன் நில மோசடி தொடர்பாக கைது செய்யப்பட்ட நிலையில் அமலாக்கத் துறை தற்போது பணியிட மாற்றம் தொடர்பான பிரச்சினைகளை விசாரித்துக் கொண்டிருக்கிறது” என கூறினார்.

இதையடுத்து இந்த விவகாரத்தில் பதில் மனு தாக்கல் செய்ய, அமலாக்கத் துறை சார்பில் கால அவகாசம் கேட்கப்பட்டது. அதைத் தொடர்ந்து, இந்த வழக்கை வரும் 27ம் தேதிக்கு ஒத்தி வைத்து நீதிபதிகள் உத்தரவிட்டனர்.

இதையும் வாசிக்கலாமே...

ஆளுநருக்கு அப்பாவு கொடுத்த பதிலடி... தமிழக சட்டமன்றத்தில் பரபரப்பு!

'வேலை கிடைக்கவில்லை; ஆனாலும் மக்களின் பாக்கெட்டுகள் கொள்ளையடிக்கப்படுகிறது' - மத்திய அரசு மீது ராகுல் தாக்கு

தமிழக அரசின் ஆளுநர் உரை... ஊசிப்போன பண்டம்... எடப்பாடி பழனிசாமி பேட்டி!

குழந்தைகளை பாலியல் பலாத்காரம் செய்தால் ஆண்மை நீக்கம்... மீண்டும் விவாதத்துக்கு வந்த ‘விதை நீக்கம்’ தண்டனை

“வந்துட்டேன்னு சொல்லு...” சமந்தா சொன்ன சூப்பர் அப்டேட்!

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE