ஜம்மு காஷ்மீர்: பாரமுல்லா மாவட்டத்தில் உள்ள ரஃபியாபாத்தின் சோபூர் பகுதியில் காவல்துறை மற்றும் 32 ராஷ்டிரிய ரைபிள்ஸ் (32 RR) படையினர் நடத்திய என்கவுன்டரில் ஒரு பயங்கரவாதி சுட்டுக்கொல்லப்பட்டான்.
ரஃபியாபாத் பகுதியில் தீவிரவாத நடவடிக்கைகள் குறித்த உளவுத்துறை விடுத்த எச்சரிக்கையை தொடர்ந்து, உள்ளூர் போலீஸ் மற்றும் மத்திய ரிசர்வ் போலீஸ் படை அடங்கிய ரோந்துக் குழு பயங்கரவாதிகளுடன் துப்பாக்கிச் சூட்டில் ஈடுபட்டது.
அப்போது பாதுகாப்புப் படையினருக்கும் பயங்கரவாதிகளுக்கும் இடையே கடும் துப்பாக்கிச் சண்டை நடந்தது. இந்த என்கவுன்டரின்போது பயங்கரவாதி ஒருவன் கொல்லப்பட்டதாக முதற்கட்ட தகவல் வெளியாகியுள்ளது. இந்த சம்பவத்தை அடுத்து அப்பகுதி பாதுகாப்புப் படையினரால் சுற்றி வளைக்கப்பட்டுள்ளது. மேலும் அப்பகுதியில் எஞ்சியுள்ள பயங்கரவாதிகளைக் கண்டுபிடிப்பதற்கான தேடுதல் நடவடிக்கை தற்போது நடைபெற்று வருகிறது.
ஜம்மு காஷ்மீரின் தோடா மாவட்டத்தில் ஆகஸ்ட் 14 அன்று பாதுகாப்புப் படையினருக்கும் பயங்கரவாதிகளுக்கும் இடையே நடந்த துப்பாக்கிச் சண்டையில் ராணுவ அதிகாரி ஒருவர் கொல்லப்பட்ட 10 நாட்களுக்குப் பிறகு, ரஃபியாபாத்தில் இன்று என்கவுன்டர் நடந்துள்ளது.
» புனேயில் ஹெலிகாப்டர் விபத்தில் சிக்கியது; மோசமான வானிலையால் விபரீதம்!
» ‘என்னிடம் போலீஸார் விசாரணை நடத்தவில்லை’ - மறுப்பு தெரிவித்த இயக்குநர் நெல்சன்!