மகாராஷ்டிரா: புனேயில் பலத்த காற்று மற்றும் மோசமான வானிலை காரணமாக தனியார் ஒன்று ஹெலிகாப்டர் விபத்துக்குள்ளானது. இந்த ஹெலிகாப்டரில் மொத்தம் நான்கு பேர் பயணித்தனர்.
குளோபல் வெக்ட்ரா ஹெலிகார்ப் நிறுவனத்தால் இயக்கப்பட்ட ஏடபிள்யூ 139 என்ற ஹெலிகாப்டர், மும்பையில் உள்ள ஜூஹூவில் இருந்து புறப்பட்டு ஹைதராபாத் நோக்கி சென்று கொண்டிருந்த போது, புனே அருகிலுள்ள பாட் கிராமப்புற பகுதியில் விழுந்து நொறுங்கியது.
முதற்கட்ட தகவல்களின்படி, இந்த விபத்தில் உயிர்ச்சேதம் எதுவும் ஏற்படவில்லை. இந்த சம்பவத்தில் கேப்டன் ஆனந்த் படுகாயம் அடைந்து சிகிச்சைக்காக சதர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். மேலும், இதில் பயணித்த மற்ற மூவரும் நல்ல நிலையில் உள்ளனர். ஹெலிகாப்டர் விபத்துக்கான காரணம் குறித்து விசாரணை நடத்தப்பட்டு வருகிறது.