ஏர் இந்தியாவுக்கு ரூ.90 லட்சம் அபராதம்

By KU BUREAU

புதுடெல்லி: சிவில் விமானப் போக்குவரத்து இயக்குநரகம் (டிஜிசிஏ) தெரிவித்துள்ளதாவது. ஏர் இந்தியா நிறுவனம் கடந்த ஜூலை 10-ம் தேதியன்று சமர்ப்பித்த அறிக்கையின் மூலம் தகுதியற்ற பணியாளர்களை் கொண்டு விமானங்களை இயக்குவது பற்றி நேரிடையாக டிஜிசிஏ ஆய்வு செய்தது. இதில், பாதுகாப்புக்கு ஊறு விளைவிக்கும் வகையில் தகுதியற்ற பணியாளர்களை வைத்து ஏர் இந்தியா விமானத்தை இயக்கியது தெரியவந்தது.

இதையடுத்து, ஏர் இந்தியா நிறுவனத்துக்கு ரூ.90 லட்சமும்,விமான நிறுவனத்தின் செயல்பாட்டு இயக்குநருக்கு ரூ.6 லட்சமும், பயிற்சி இயக்குநருக்கு ரூ.3 லட்சமும் அபராதம் விதிக்கப்பட்டது. இவ்வாறு டிஜிசிஏ தெரிவித்துள்ளது.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE