மக்களவைத் தேர்தலுக்கு முன் சிஏஏ சட்டம் அமலுக்கு வரும்... அமித் ஷா திட்டவட்டம்!

By காமதேனு

மக்களவைத் தேர்தலுக்கு முன் சிஏஏ சட்டம் அமலுக்கு வரும். அதில் எந்த குழப்பமும் வேண்டாம் என மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா திட்டவட்டமாக தெரிவித்துள்ளார்.

உள்துறை அமைச்சர் அமித் ஷா

2014-ம் ஆண்டுக்கு முன் பாகிஸ்தான், வங்கதேசம் மற்றும் ஆப்கானிஸ்தான் உள்ளிட்ட நாடுகளில் இருந்து இந்தியாவிற்குள் தஞ்சமடைந்த சிறுபான்மையின மக்களுக்குக் குடியுரிமை வழங்க, குடியுரிமை திருத்த சட்டம் 2019 கொண்டு வரப்பட்டது.

இதன் மூலம் அண்டை நாடுகளில் இருந்து இந்தியாவிற்குள் வந்து நீண்ட காலமாக வசித்து வரும் இந்துக்கள், கிறிஸ்தவர்கள், சீக்கியர்கள் ஆகியோருக்கு இந்தியக் குடியுரிமை இந்த சட்டத்தின் மூலம் வழங்கப்பட உள்ளது. இது சிறுபான்மையினரைப் பாதிப்பதாக உள்ளது எனக் கூறி, எதிர்க்கட்சிகள் குற்றம்சாட்டி வருகின்றன. தமிழகம் உட்பட பல்வேறு மாநிலங்கள் இதனை அமல்படுத்த மாட்டோம் என்றும் கூறி வருகின்றன.

உள்துறை அமைச்சர் அமித் ஷா (கோப்பு)

2019-ம் ஆண்டு இந்த சட்டம் கொண்டு வரப்பட்டிருந்தாலும், இதுநாள் வரை அமல்படுத்தப்படாமல் உள்ளது. இந்நிலையில், தேர்தலுக்கு முன்பாக இந்த சட்டம் அமல்படுத்தப்படும் என்று மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா தெரிவித்துள்ளார்.

மேலும், இந்த சட்டம் இஸ்லாமியர்களுக்கு எதிராக இருப்பதாகக் கூறி, சர்ச்சைகள் எழுப்பப்பட்டு வருகிறது. இந்த சட்டம் குடியுரிமை வழங்க கொண்டு வரப்பட்டதே தவிர, யாருடைய குடியுரிமையும் பறிக்கப்பட அல்ல என்றும், குடியுரிமை பறிப்பு தொடர்பாக எந்த ஷரத்தும் இந்த சட்டத்தில் இல்லை எனக் கூறியுள்ளார். சிஏஏ விவகாரத்தில் காங்கிரஸ் தான் கொடுத்த வாக்குறுதியில் இருந்து பின் வாங்கிவிட்டதாகவும் அமித் ஷா தெரிவித்துள்ளார்.

இதையும் வாசிக்கலாமே...

தொடக்கக் கல்வித்துறையில் 1768 காலிப்பணியிடங்கள்...பிப்.14 முதல் விண்ணப்பிக்கலாம்!

அதிகாலையில் அதிர்ச்சி... சுற்றுலா பேருந்து மீது லாரி மோதி 8 பேர் பலி!

கதறும் பயணிகள்... கிளாம்பாக்கத்தில் நடுரோட்டில் அமர்ந்து பொதுமக்கள் விடியவிடிய போராட்டம்!

தமிழ்நாட்டில் 27 இடங்களில் என்ஐஏ அதிகாரிகள் சோதனை!

அரபிக்குத்து பாட்டுக்கு பெல்லி டான்ஸில் தெறிக்க விட்ட கீர்த்தி ஷெட்டி... வைரலாகும் வீடியோ!

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE