“அரசியலமைப்பு பதவிகளில் உள்ள சிலர், கற்பனை கதைகள் மூலம் இந்தியாவை மதச்சார்பான நாடாக மாற்ற முயற்சிக்கின்றனர்” என கேரள முதல்வர் பினராயி விஜயன் குற்றம்சாட்டியுள்ளார்.
கேரள மாநிலம் காசர்கோடில் ‘36-வது கேரள அறிவியல் காங்கிரஸ்' தொடக்க நிகழ்ச்சி இன்று நடைபெற்றது. இந்த நிகழ்ச்சியை தொடங்கி வைத்து பினராயி விஜயன் பேசியதாவது:
“அறிவுசார் சிந்தனைக்கு பதிலாக கற்பனையான கதைகளுக்கு முன்னுரிமை அளிப்பதன் மூலம் சில நபர்கள் நமது மதச்சார்பற்ற நாட்டை, மதச்சார்பான நாடாக மாற்ற முயற்சிக்கின்றனர். துரதிர்ஷ்டவசமாக, அரசியலமைப்பு பதவிகளில் உள்ள சிலர் இத்தகைய முயற்சிகளுக்கு தலைமை வகிக்கிறார்கள். எனவே, நாம் விழிப்புடனும் எச்சரிக்கையுடனும் முன்னேறிச் செல்ல வேண்டும்.
இந்த நவீன காலத்தில் கூட, மனிதப் பலி போன்ற கொடூரமான செயல்கள் நடப்பதை நாம் கண்டோம். மூடநம்பிக்கைகள் அதிகரித்து வருகின்றன.
இந்த பிரச்சினைகளை நாம் தீவிரமாக கவனித்து அவற்றிலிருந்து பாதுகாத்துக்கொள்ள வேண்டும். இதற்கு நாம், சமூகத்தில் அறிவியல் விழிப்புணர்வை ஏற்படுத்த வேண்டும். கேரள அறிவியல் காங்கிரஸ் அதற்கான தீர்வாகும்.
நிலையான வளர்ச்சி, கல்வி, சுகாதாரம் மற்றும் பல்வேறு துறைகளில் நாட்டிலேயே கேரளா ஒரு பிரகாசமான முன்மாதிரியாக திகழ்கிறது. கேரளா தனது பட்ஜெட்டில் ஆராய்ச்சி மற்றும் மேம்பாட்டிற்காக ரூ.3,500 கோடியை ஒதுக்கியுள்ளது.
கேரளத்தின் ஆராய்ச்சி பணிகளுக்கு ஒரு பெரிய சவால் திறமையானவர்கள் வெளிநாடு சென்றுவிடுவதுதான். எனவே, வளர்ந்த நாடுகளில் இருக்கும் கேரள மாநிலத்தவர்களின் திறமைகளை ஈர்க்கும் திட்டங்களை செயல்படுத்த ஆலோசித்து வருகிறோம்”
இவ்வாறு பினராயி விஜயன் பேசினார்.
இதையும் வாசிக்கலாமே...
ரஜினி மகளை உசுப்பேற்றும் ரசிகர்கள்... ஐஸ்வர்யாவுக்கு தனி கொடி அறிமுகப்படுத்தி அலப்பறை!
அதிர்ச்சி... நேரலையில் சிவசேனா பிரமுகரை சுட்டுக்கொன்றுவிட்டு, கொலையாளியும் தற்கொலை!
ஒலிம்பிக் மெடலுடன் ஈபிள் டவர் பகுதியை எடுத்து செல்லலாம்... பிரான்ஸ் அசத்தல் அறிவிப்பு!
பகீர் வீடியோ... தியேட்டருக்குள் தீவைத்து கொண்டாடிய ரசிகர்கள்!
மின்வாரிய அதிகாரிகள் அலட்சியம்... கால்களை பறிகொடுத்த இளைஞர்!