61 வயதில் 16 வயது இளைஞரைப் போல் சைக்கிளில் உலகம் சுற்றும் அமெரிக்கர்!

By காமதேனு

அமெரிக்காவை சேர்ந்த 61 வயது முதியவர் ஒருவர், சைக்கிளில் உலக நாடுகளை சுற்றி வரும் நிலையில், கரூரில் அவரை பார்த்த பொதுமக்கள் அவருடன் செல்ஃபி எடுத்து மகிழ்ந்தனர்.

அமெரிக்காவின் கலிபோர்னியாவைச் சேர்ந்த ரிச் ஹேகெட் என்பவருக்கு தற்போது 61 வயது ஆகிறது. திருமணமாகாத இவர், தாய் மற்றும் சகோதரருடன் வசித்து வந்தார். படிப்பில் பெரிய அளவில் சாதிக்காத இவர், சமையலில் மிகுந்த ஈடுபாட்டுடன் இருந்து வந்துள்ளார். இதனால் அமெரிக்காவில் உள்ள ஒரு பல்கலைக்கழகத்தில் சமையல் செய்து வந்த இவர், ஓய்வு பெற்ற பின்னர் உலகம் முழுவதும் சுற்றி பார்க்க வேண்டும் என விரும்பினார். இதையடுத்து செக் நாட்டில் தயாரிக்கப்பட்ட பிரத்யேக சைக்கிள் ஒன்றில் உலக நாடுகள் முழுவதும் சுற்றி வரத்துவங்கினார்.

1991ம் ஆண்டு முதல் தற்போது வரை 120 நாடுகளுக்கு மேலாக அவர் பயணம் செய்துள்ளார். இந்தியா வழியாக 2014, 2015, 2018 மற்றும் 2023 ஆகிய ஆண்டுகளில் அவர் பயணம் மேற்கொண்டு உள்ளார். தான் செல்லும் ஒவ்வொரு நாட்டுக்கும் இந்த சைக்கிளுடன் செல்லும் அவர் அந்நாடு முழுவதும் பயணித்து, பல்வேறு தரப்பிலான மக்களையும், கலாச்சாரத்தையும் அறிந்து கொண்டு வருகிறார்.

கரூர் மக்கள் செல்ஃபி எடுத்து மகிழ்ச்சி

தினந்தோறும் 80 முதல் 125 கிலோமீட்டர் வரை பயணிப்பதாக கூறும் அவர், போகும் இடங்களில் உள்ள உணவகங்களில் தங்கி செல்வதாகவும், பல நேரங்களில் சொந்த உணவை சமைத்து சாப்பிடுவதாகவும் தெரிவித்துள்ளார். தற்போது கரூர் மாவட்டம் மலைக்கோவிலூர் அருகே பெங்களூரு நோக்கி சென்று கொண்டிருந்தார். அவ்வழியே சென்ற பொதுமக்கள் அவரை ஆச்சரியத்துடன் பார்த்தவாறு அவருடன் செல்ஃபி எடுத்து மகிழ்ந்தனர்.

இதையும் வாசிக்கலாமே...

முற்றுகிறது மோதல்... பட்டமளிப்பு விழாவை புறக்கணிப்பதாக பொன்முடி அறிவிப்பு!

வன்னியர்களுக்கு 10.5 சதவீத இட ஒதுக்கீடு: முதல்வர் ஸ்டாலின் ஆலோசனை!

பட்டத்து இளவரசியாக முடிசூடினார் 18 வயது லியோனார்!

தீபாவளிக்கு தெறிக்கப் போகுது... மதுப் பிரியர்கள் உற்சாகம்; நவ.10 முதல் புதிய ‘பீர்’ வகைகள் அறிமுகம்!

திடீர் பரபரப்பு.. ரத்த சிவப்பாய் மாறிய கடல்!

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE