வெள்ளை அறிக்கைக்கு பதிலாக கருப்பு அறிக்கை: பாஜகவை எதிர்கொள்ள காங்கிரஸ் வியூகம்!

By காமதேனு

கடந்த 10 ஆண்டுகால நரேந்திர மோடி அரசின் சாதனையாக வெளியிடப்பட உள்ள வெள்ளை அறிக்கைக்கு பதிலடியாக கருப்பு அறிக்கையை வெளியிட காங்கிரஸ் கட்சி முடிவு செய்துள்ளது.

மத்தியில் கடந்த 2014ல் ஆட்சிக்கு வந்ததிலிருந்து பாஜக அரசின் சாதனைகளை பட்டியலிட்டு வெள்ளை அறிக்கை வெளியிட மத்திய அரசு முடிவு செய்துள்ளது.

நாடாளுமன்றத்தில் கடந்த 1ம் தேதி இடைக்கால பட்ஜெட்டை தாக்கல் செய்து நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் பேசுகையில், "கடந்த 2014 வரை நாம் எங்கே இருந்தோம். இப்போது நாம் எங்கே இருக்கிறோம் என்பதை வெளிப்படுத்தும் வகையில் நாடாளுமன்றத்தின் இரு அவைகளிலும் வெள்ளை அறிக்கையை அரசு முன்வைக்கும். தவறான ஆட்சி கால நிர்வாகத்திலிருந்து பாடம் கற்றுக்கொள்வதே வெள்ளை அறிக்கையின் நோக்கம்" என தெரிவித்திருந்தார்.

இந்நிலையில் பாஜக எம்பி ஜெயந்த் சின்ஹா நேற்று கூறுகையில், "காங்கிரஸ் தலைமையிலான ஐக்கிய முற்போக்கு கூட்டணி, ஆட்சியை விட்டு வெளியேறிய போது நாட்டில் இருந்த மோசமான பொருளாதார நிலை, பாஜக அரசு அதை எவ்வாறு மாற்றியது என்பதை வெள்ளை அறிக்கை முன்னிலைப்படுத்தும். காங்கிரஸ் ஆட்சியில் இந்தியாவின் மொத்த உள்நாட்டு உற்பத்தி வளர்ச்சி 5 சதவீதமாகக் குறைந்தது. பணவீக்கம், வங்கிகளின் வாராக்கடன் தலா 10 சதவீதமாக உயர்ந்தது. நிதி நெருக்கடியை நாடு எதிர்கொண்டிருந்தது" என்றார்.

மாநிலங்களவையில் பேசிய பிரதமர் மோடி

இந்நிலையில், பாஜக அரசு வெளியிட உள்ள வெள்ளை அறிக்கைக்கு பதிலடியாக, காங்கிரஸ் கட்சி கருப்பு அறிக்கையை வெளியிட திட்டமிட்டுள்ளது. இதனை காங்கிரஸ் தலைவர் மல்லிகார்ஜுனா கார்கே வெளியிடுவார் என அக்கட்சி வட்டாரங்கள் தெரிவித்துள்ளன.

இதற்கிடையே மாநிலங்களவையில் பிரதமர் மோடி நேற்று காங்கிரஸை தாக்கி பேசியதற்கு மல்லிகார்ஜுனா கார்கே பதிலடி கொடுத்துள்ளார். இது தொடர்பாக தனது எக்ஸ் வலைதளத்தில் அவர் வெளியிட்டுள்ள பதிவில், "கடந்த 10 ஆண்டுகளாக ஆட்சியில் இருந்தபோதிலும், பாஜக அரசின் சாதனைகளைப் பற்றி பேசுவதற்குப் பதிலாக, பிரதமர் மோடி காங்கிரஸ் கட்சியை மட்டுமே விமர்சிக்கிறார். இன்றும் (நேற்று) கூட அவர் விலைவாசி உயர்வு, வேலையின்மை மற்றும் பொருளாதார சமத்துவமின்மை பற்றி பேசவில்லை” என தெரிவித்துள்ளார்.

இதையும் வாசிக்கலாமே...

தமிழக அமைச்சர்கள் மீதான வழக்குகள்: நீதிபதி ஆனந்த் வெங்கடேஷ் இன்று விசாரிக்கிறார்!

இலங்கை கடற்படை அட்டூழியம் தொடர்கிறது... தமிழக மீனவர்கள் 19 பேர் கைது!

8-ம் வகுப்பு படித்தவர்களுக்கு சுகாதாரத்துறையில் வேலை: பிப்.22 வரை விண்ணப்பிக்கலாம்!

நடிப்பை உதறித் தள்ளி புத்த மதத்தைத் தழுவிய நடிகை... ரசிகர்கள் அதிர்ச்சி!

கணவரைப் பிரிந்தார் சூர்யா பட நடிகை!

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE