மகாராஷ்டிரா மாநிலம், நான்டேட் மாவட்டத்தில் உள்ள ஒரு கிராமத்தில் நடைபெற்ற விழா ஒன்றில் உணவு உட்கொண்ட 2 ஆயிரம் பேர் ஃபுட் பாய்சனால் பாதிக்கப்பட்டனர்.
மகாராஷ்டிரா மாநிலம், நான்டேட் மாவட்டம், லோஹா தாலுகாவில் உள்ள கோஸ்த்வாடி கிராமத்தில் மத சொற்பொழிவு நிகழ்ச்சி நேற்று நடைபெற்றது.
இதில், உள்ளூர் மக்களும் அருகிலுள்ள சவார்கான், போஸ்ட்வாடி, ரிஸங்காவ், மஸ்கி கிராமங்களைச் சேர்ந்த பொதுமக்கள் பங்கேற்றனர். மாலை 5 மணியளவில் அனைவரும் உணவு சாப்பிட்டனர். இந்நிலையில் இந்த நிகழ்ச்சியில் உணவு உட்கொண்ட மக்கள் ஏராளமானோருக்கு வாந்தி மற்றும் வயிற்றுப்போக்கு ஏற்பட்டது. ஆரம்பத்தில், உடல்நலக் குறைவு ஏற்பட்ட 150 பேர் நான்டேட்டின் லோஹாவில் உள்ள துணை மாவட்ட மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனர்.
பின்னர், ஏராளமான மக்கள் இதே பிரச்சினைகளுடன் வந்தனர். இந்த சம்பவத்தில் சுமார் 2 ஆயிரம் பேருக்கு பாதிப்பு ஏற்பட்டுள்ளதாக கூறப்படுகிறது. அடுத்தடுத்து வந்த 870 நோயாளிகள், சங்கரராவ் சவான் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனை உள்பட பல்வேறு மருத்துவமனைகளில் அனுமதிக்கப்பட்டனர்.
தேவைப்பட்டால் நான்டேட் அரசு ஆயுர்வேத மருத்துவமனையில் கூடுதல் படுக்கை வசதிகள் ஏற்பாடு செய்யப்படும் என அம்மாநில சுகாதார துறை அலுவலர்கள் தெரிவித்துள்ளனர். நோயாளிகளிடமிருந்து பரிசோதனை மாதிரிகள் ஆய்வுக்கு எடுக்கப்பட்டுள்ளதாகவும் சுகாதாரத் துறை அதிகாரிகள் தெரிவித்தனர்.
இதற்கிடையே உணவு ஒவ்வாமையால் பாதிக்கப்பட்ட கிராமங்களில் ஆய்வு செய்ய 5 குழுக்களை அரசு அனுப்பி வைத்துள்ளது. இந்த விவகாரம் குறித்து விசாரணை நடத்தவும் குழு அமைக்கப்பட்டுள்ளது. அதிர்ஷ்டவசமாக இந்த சம்பவத்தில் உயிரிழப்பு எதுவும் ஏற்படவில்லை. பல்வேறு மருத்துவமனைகளில் அனுமதிக்கப்பட்ட நோயாளிகள் நலமுடன் உள்ளதாகவும், சிகிச்சை முடிந்த பிறகு அவர்கள் டிஸ்சார்ஜ் செய்யப்படுவார்கள் என்றும் அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
இதையும் வாசிக்கலாமே...
ரசிகர்கள் அதிர்ச்சி... விஜய் கட்சிக்கு TVK பெயர் கிடைக்காது!?
அதிகாரிகளை அலறவிடும் ஆட்சியர்... திருப்பத்தூர் மாவட்ட மக்கள் மகிழ்ச்சி!
ரூ.200 கோடி சம்பளத்தை உதறிய விஜய்... பிரபல தயாரிப்பாளர் பரபரப்பு!
உதகையில் பயங்கர நிலச்சரிவு; மண்ணில் புதைந்து 7 பேர் பலியான சோகம்
தாயைக் கொன்ற மகன்... வழக்கில் திடீர் திருப்பம்... கணவனே மனைவியைக் கொன்றது அம்பலம்!