பரபரப்பு... காங்கிரஸ் மூத்த தலைவர் வீட்டில் அமலாக்கத் துறை ரெய்டு!

By காமதேனு

சட்ட விரோத பணப் பரிமாற்ற வழக்கில் உத்தராகண்ட் காங்கிரஸ் மூத்த தலைவர் ஹரக் சிங் ராவத் வீட்டில் அமலாக்கத் துறையினர் இன்று சோதனையில் ஈடுபட்டுள்ளனர்.

உத்தராகண்ட் மாநிலம் டேராடூனைச் சேர்ந்தவர் ஹரக் சிங் ராவத். காங்கிரஸ் மூத்த தலைவரும், முன்னாள் அமைச்சருமான இவரது வீடு மற்றும் அம்மாநிலத்தில் ஹரக் சிங் ராவத் தொடர்புடைய பல்வேறு இடங்களில் சோதனை நடைபெற்று வருகிறது.

இதேபோல் டெல்லி மற்றும் சண்டிகரிலும் ஹரக் சிங் ராவத் தொடர்புடைய இடங்களில் சோதனை நடைபெற்று வருகிறது.

63 வயதான ஹரக் சிங் ராவத், கடந்த 2022ல் உத்தராகண்ட் சட்டப்பேரவைத் தேர்தலுக்கு முன்னதாக பாஜகவிலிருந்து விலகி காங்கிரஸில் சேர்ந்தார். அம்மாநிலத்தில் கார்பெட் புலிகள் காப்பகத்தில் நடந்த முறைகேடுகள், சட்ட விரோத பணப் பரிமாற்றம் தொடர்பாக அமலாக்கத்துறை விசாரணை நடைபெற்று வருவதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

புலிகள் காப்பகத்தில் பெரிய அளவில் மரங்கள் வெட்டப்பட்டதாகவும், சட்டவிரோத கட்டுமானங்கள் நடந்ததாகவும் எழுந்த புகார்கள் தொடர்பாக உத்தராகண்ட் மாநில அரசின் கண்காணிப்புத் துறையும் கடந்த ஆண்டு ஹரக் சிங் ராவத்தின் இல்லத்தில் சோதனை நடத்தியது.

அமலாக்கத் துறை

முந்தைய பாஜக அரசில், ஹரக் சிங் ராவத் வனத்துறை அமைச்சராக இருந்தபோது, ஆயிரக்கணக்கான மரங்கள் வெட்டப்பட்டதாகவும், ரிசர்வ் பகுதியில் கட்டுமானங்கள் மேற்கொள்ளப்பட்டதாகவும் கூறப்படுகிறது. காங்கிரஸ், பாஜக தவிர, பகுஜன் சமாஜ் கட்சியிலும் ஹரக் சிங் ராவத் இருந்துள்ளார்.

பிரிக்கப்படாத உத்தரபிரதேசத்தில் பாஜகவில் ஹரக் சிங் ராவத் தனது அரசியல் வாழ்க்கையைத் தொடங்கினார். 1996ல் பகுஜன் சமாஜ் கட்சியில் சேர்ந்தார். 2 ஆண்டுகளுக்குப் பிறகு காங்கிரஸில் சேர்ந்தார். அக்கட்சியில் 18 ஆண்டுகள் இருந்த பிறகு கடந்த 2016ல் பாஜகவில் சேர்ந்தார். கடந்த 2022 சட்டப் பேரவைத் தேர்தலின்போது தனக்கும், தனது மருமகளுக்கும் சீட் கேட்டு நிர்பந்தித்ததால் அவர் பாஜகவில் இருந்து நீக்கப்பட்டார். அதன்பிறகு ஹரக் சிங் ராவத் மீண்டும் காங்கிரஸில் ஐக்கியமாகிவிட்டார்.

இதையும் வாசிக்கலாமே...

வாக்காளர் பட்டியலில் இருந்து 1.66 கோடி பேர் நீக்கம்... உச்ச நீதிமன்றத்தில் தேர்தல் ஆணையம் தகவல்!

சட்லஜ் ஆற்றில் மீட்கப்பட்டது வெற்றி துரைசாமியின் உடல் பாகமா?: டிஎன்ஏ பரிசோதனை!

பாஜகவில் ஐக்கியமாகும் 18 அதிமுக முன்னாள் எம்எல்ஏக்கள்... அண்ணாமலை அவசரமாக இன்று டெல்லி பயணம்!

கூட்டணிக்காக விடாமல் துரத்தும் அதிமுக, பாஜக... குழப்பத்தில் பாமக!

அணையப்போகும் விளக்கு பிரகாசமாகத் தான் எரியும்... அதிமுக மீது அண்ணாமலை பாய்ச்சல்!

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE