மராத்தா இடஒதுக்கீடு கோரிக்கை... 2 எம்.பிக்கள் திடீர் ராஜினாமா!

By காமதேனு

மகாராஷ்டிர முதல்வர் ஏக்நாத் ஷிண்டேவின் அணியைச் சேர்ந்த நாசிக் மற்றும் ஹிங்கோலியைச் சேர்ந்த சிவசேனா எம்.பி.க்கள் மராத்தா இடஒதுக்கீடு கோரிக்கைக்கு ஆதரவாக ராஜினாமா செய்துள்ளனர்.

ஹிங்கோலி எம்.பி ஹேமந்த் பாட்டீல் திங்கள்கிழமை டெல்லியில் உள்ள மக்களவை செயலகத்தில் தனது ராஜினாமா கடிதத்தை சமர்ப்பித்தார். அதே நேரத்தில் நாசிக் எம்.பி ஹேமந்த் கோட்சே தனது ராஜினாமா கடிதத்தை முதல்வர் ஷிண்டேவுக்கு அனுப்பியுள்ளார்

ஹேமந்த் பாட்டீல் இதுகுறித்து பேசியபோது "மக்களவை சபாநாயகர் அலுவலகத்தில் இல்லாததால், எனது ராஜினாமா கடிதம் அலுவலக செயலரிடம் சமர்ப்பிக்கப்பட்டது. எனக்கு ஒப்புகை கிடைத்துள்ளது" என தெரிவித்தார்.

மராத்தா இட ஒதுக்கீடு தொடர்பாக மகாராஷ்டிரா முழுவதும் போராட்டங்கள் தீவிரமடைந்து வரும் நிலையில், இடஒதுக்கீடு கோரிக்கையில் தனது நிலைப்பாட்டை தெளிவுபடுத்துமாறு ஹேமந்த் பாட்டீலிடம் போராட்டக்காரர்கள் கேள்வி எழுப்பினர். எனவே. பாட்டீல் அந்த இடத்திலேயே தனது ராஜினாமா கடிதத்தை தயாரித்து போராட்டக்காரர்களிடம் கொடுத்தார்.

நாசிக்கில் உண்ணாவிரதத்தில் ஈடுபட்டிருந்த மராத்தா போராட்டக்காரர்கள், இந்த விவகாரத்தில் சிவசேனா எம்.பி கோட்சேவின் நிலைப்பாட்டை தெளிவுபடுத்தும்படி வேண்டுகோள் விடுத்ததால், அவர் முதல்வர் ஷிண்டேவுக்கு ராஜினாமா கடிதத்தை அனுப்பினார். மேலும், விரைவில் மராத்தா சமூகத்தினருக்கு இடஒதுக்கீடு வழங்குமாறும் வேண்டுகோள் விடுத்தார்.

இதனிடையே மத்திய மகாராஷ்டிராவில் உள்ள பீட் மாவட்டத்தைச் சேர்ந்த கெவ்ராய் சட்டமன்ற தொகுதியின் பாஜக எம்எல்ஏ லட்சுமண பவார், மராத்தா இடஒதுக்கீடு கோரிக்கையை ஆதரித்து தனது பதவியை ராஜினாமா செய்தார். அதேபோல காங்கிரஸ் கட்சியின் பர்பானி பத்ரி தொகுதி எம்.எல்.ஏவான சுரேஷ் வார்புட்கரும் இந்த கோரிக்கையை வலியுறுத்தி ராஜினா செய்துள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது.

இதையும் வாசிக்கலாமே...

அதிர்ச்சி... திமுக பிரமுகர் ஓட ஓட விரட்டி கொலை!

பகீர்... 81 கோடி இந்தியர்களின் ஆதார் தரவுகள் விற்பனை... சிபிஐ விசாரணை!

இன்றே கடைசி தேதி... 2250 காலிப்பணியிடங்களுக்கு விண்ணப்பங்கள் வரவேற்பு!

மைதானத்தில் வீராங்கனைக்கு முத்தமிட்ட விவகாரம்... லூயிஸுக்கு 3 ஆண்டுகள் தடை!

பரபரப்பு… பட்டாசு கடையில் பயங்கர தீ விபத்து!

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE