தேர்தல் பிரச்சாரத்துக்குச் சென்ற எம்.பிக்கு கத்திக்குத்து... தெலங்கானா பரபரப்பு!

By காமதேனு

தெலங்கானாவில் பிஆர்எஸ் கட்சியின் மேடாக் எம்பியும், துப்பாக் சட்டசபை தொகுதியின் வேட்பாளருமான பிரபாகர் ரெட்டியை மர்மநபர் ஒருவர் கத்தியால் குத்தியதால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.

தெலங்கானா சட்டசபை தேர்தல் வரும் நவம்பர் 30ம் தேதி நடைபெறுகிறது. இந்த தேர்தலில் எப்படியும் ஆட்சியை தக்க வைத்துக் கொள்ள முதல்வர் சந்திரசேகர ராவ் போராடி வருகிறார். அந்த வகையில் பிஆர்எஸ் கட்சியின் சார்பில் துப்பாக் சட்டசபை தொகுதிக்கு மேடாக் எம்பி பிரபாகர் ரெட்டி அறிவிக்கப்பட்டார். அவர் இன்று தனது தொகுதிக்குள்பட்ட பகுதிகளில் தேர்தல் பிரச்சாரத்தில் ஈடுபட்டிருந்தார்.

அப்போது அவர் சித்திபெட் மாவட்டத்தில் தவுலதாபாத் பகுதியில் சுரம்பள்ளி கிராமத்தில் பிரச்சாரம் செய்தார். கூட்டத்தில் மர்ம நபர் வேட்பாளர் பிரபாகர் ரெட்டிக்கு கை குலுக்க சென்றார். பிரபாகர் ரெட்டியும் கை கொடுத்தார். அப்போது திடீரென அந்த நபர் தான் மறைத்து வைத்திருந்த கத்தியால் குத்தினார்.

இதில் அவருக்கு வயிற்று பகுதியில் காயம் ஏற்பட்டது. உடனே கட்சி நிர்வாகிகளும் பிரபாகர் ரெட்டி ஆதரவாளர்களும் அந்த நபரை மடக்கி பிடித்து சரமாரியாக தாக்கினர். அந்த மர்மநபரின் பெயர் ராஜு என தெரியவந்தது. அவர் கத்தியால் ஏன் குத்தினார் என தெரியவில்லை.

இதையடுத்து பிரபாகர் ரெட்டியை அவருடைய காரிலேயே கஜ்வெல்லில் உள்ள மருத்துவமனைக்கு அழைத்து சென்றனர். இதுகுறித்து தகவலறிந்த போலீஸார் மர்ம நபரை கைது செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள். மாநில சுகாதாரத் துறை அமைச்சர் டி ஹரீஷ் ராவ் எம்பியை தொடர்பு கொண்டு பேசினார். தேவைப்பட்டால் பிரபாகர் ரெட்டியை ஹைதராபாத் மருத்துவமனைக்கு மாற்றுவதாகவும் உறுதியளித்திருந்தார். இந்த கத்திக்குத்து சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

இதையும் வாசிக்கலாமே...

அடுத்த அதிர்ச்சி... நீட் தேர்வால் மாணவி தற்கொலை!

அதிர்ச்சி... ‘பிரேமம்’ இயக்குநருக்கு ஆட்டிஸம் பாதிப்பு!

110 நாட்கள் உண்ணாவிரதம்... 16 வயது சிறுமியின் ஆச்சரிய சாதனை!

1000 ரூபாயில் செயற்கைக்கோள்... பிளஸ் 2 மாணவரின் அசர வைக்கும் கண்டுபிடிப்பு!

படப்பிடிப்பில் பிரபல நடிகர் படுகாயம்... மருத்துவமனையில் அனுமதி!

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE