பேரிடர் நிவாரண நிதி வழங்குவதில் பாரபட்சம்... மக்களவையில் ஆ.ராசா குற்றச்சாட்டு!

By காமதேனு

பேரிடர் நிவாரண நிதி வழங்குவதில் ஒன்றிய அரசு பாரபட்சம் காட்டுவதாக திமுக எம்பி-யான ஆ.ராசா மக்களவையில் குற்றம்சாட்டினார்.

நாடாளுமன்ற இடைக்கால பட்ஜெட் கூட்டத்தொடர் கடந்த 31-ம் தேதி குடியரசுத் தலைவர் திரவுபதி முர்மு உரையுடன் துவங்கி நடைபெற்று வருகிறது. கடந்த 1-ம் தேதி மத்திய நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன் இடைக்கால பட்ஜெட்டை தாக்கல் செய்தார். வரும் 9-ம் தேதியுடன் இந்தக் கூட்டத் தொடர் முடிவடைகிறது.

இந்நிலையில், மக்களவையில் இன்று கேள்வி நேரத்தின்போது, திமுக எம்பி-யான ஆ.ராசா பேசுகையில் “தமிழ்நாட்டுக்கு பேரிடர் நிவாரண நிதி ஒதுக்குவதில் ஒன்றிய அரசு பாரபட்சம் காட்டுகிறது. நிதி வழங்குவது தொடர்பாக இதுவரை ஒன்றிய அரசு எந்த பதிலும் அளிக்கவில்லை” என்றார்.

நாடாளுமன்றம்

தொடர்ந்து பேசிய அவர், “மாநில பேரிடர் நிதிக்கும், தேசிய பேரிடர் நிதிக்கும் எந்தத் தொடர்பும் இல்லை. மாநில பேரிடர் நிதி என்பது பேரிடரின்போது மாநில அரசு ஒதுக்கும் நிவாரண நிதியாகும். இது அனைத்து மாநிலத்துக்கும் பொதுவானது.

நிவாரண நிதி வழங்கும்போது அனைத்து மாநிலங்களையும் சமமாக நடத்த வேண்டும். குஜராத் போன்ற பாஜக ஆளும் மாநிலங்களுக்கு வெள்ள நிவாரணம் வழங்குவதுபோல், அனைத்து மாநிலங்களுக்கும் சமமாக நிதி வழங்க வேண்டும்.

தேசிய பேரிடர் நிவாரண நிதியில் அனைத்து மாநிலங்களுக்கும் பாரபட்சம் இல்லாமல் சமமான நிவாரண நிதி வழங்கும் நிலையை ஏற்படுத்தும் வகையில் புதிய விதிகளை வகுக்க வேண்டும்" என்றார்.

இதையும் வாசிக்கலாமே...

'கை'விடப்படும் ஜோதிமணி; கரூரில் களம் காண்கிறாரா அமைச்சரின் மனைவி?

இரட்டை இலை சின்னம் முடங்கும்... அதிமுக முன்னாள் அமைச்சர் பரபரப்பு தகவல்!

தேர்தல் தர்பார் |விஸ்வரூபமெடுக்கும் பாஜக; விஜயைத் துரத்தும் சில்மிஷங்கள்!

பயங்கரம்... கார் ஏற்றி போலீஸ்காரர் கொலை: செம்மரக்கடத்தல் கும்பல் அட்டூழியம்!

வேலூரில் ஏ.சி.சண்முகம் போட்டி... பாஜக கூட்டணியில் யார், யாருக்கு எந்தத் தொகுதி?

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE