புதுடெல்லி: உக்ரைன் தலைநகர் கீவ்-க்கு செல்வதற்கு முன்பாக, உக்ரைன் மோதலுக்கு தீர்வு காண்பதற்கான பார்வைகளை உக்ரைன் ஜனாதிபதி விளாடிமிர் ஜெலன்ஸ்கியுடன் பகிர்ந்து கொள்ள விரும்புகிறேன் என்று பிரதமர் மோடி புதன்கிழமை தெரிவித்துள்ளார்.
ஆக.21 முதல் 23 வரை பிரதமர் நரேந்திர மோடி போலந்து மற்றும் உக்ரைன் ஆகிய நாடுகளுக்கு பயணம் மேற்கொள்கிறார். பயணத்தின் முதல் கட்டமாக போலந்துக்கு இரண்டு நாள் பயணம் செல்லும் பிரதமர் மோடி, அதன் தலைநகர் வார்சாவில் இருந்து கிவ்-க்குச் செல்கிறார்.
பயணத்துக்கு முன்பாக பிரதமர் மோடி வெளியிட்டுள்ள அறிக்கையில், "உக்ரைன் பிரதமர் விலாடிமிர் ஜெலன்ஸ்கியின் அழைப்பின் பெயரில் போலந்தில் இருந்து உக்ரைன் செல்கிறேன். இந்திய பிரதமர் ஒருவர் உக்ரைனுக்குச் செல்வது இதுவே முதல் முறை.
இருதரப்பு ஒத்துழைப்புகளை வலுப்படுத்துவதற்கான ஜெலன்ஸ்கியுடனான முந்தைய பேச்சுவார்த்தையின் அடிப்படையிலான வாய்ப்புகள், மற்றும் உக்ரைன் மோதலுக்கான தீர்வுகளுக்கான பார்வைகளை பகிர்ந்து கொள்ளவதற்கான வாய்ப்புகளை எதிர்நோக்குகிறேன்.
» அப்பா, உங்கள் கனவை நிறைவேற்றுவேன்: ராஜீவ் பிறந்தநாளில் ராகுல் உருக்கம்
» மேகாலயாவில் 2 வயது சிறுவனுக்கு போலியோ பாதிப்பா? - அச்சத்தில் உறைந்த இந்தியா
ஒரு நண்பனாக மற்றும் கூட்டாளியாக இந்தப் பிராந்தியத்தில் அமைதியும் ஸ்திரத்தன்மையும் விரைவில் திரும்பும் என்று நம்புகிறேன்.
ஜனநாயகம் மற்றும் பன்முகத்தன்மைக்கான நமது அர்ப்பணிப்புகள் எங்களின் உறவினை வலுப்படுத்தும். இந்த உறவினை மேலும் வலுப்படுத்த எனது நண்பர் பிரதமர் டொனால்ட் டஸ்க் மற்றும் ஜனாதிபதி அண்டர்ஜஸ் துடா ஆகியோரை சந்திக்க ஆவலுடன் இருக்கிறேன்.
அதேபோல் போலாந்தில் உள்ள துடிப்பான இந்திய சமூகத்தினரையும் நான் சந்திக்க உள்ளேன்" இவ்வாறு பிரதமர் மோடி தெரிவித்துள்ளார்.