‘போராட்டங்களின் துணைவர்கள்’: ராகுலுடனான புகைப்படங்களை பகிர்ந்து பிரியங்கா காந்தி ரக்ஷாபந்தன் வாழ்த்து

By KU BUREAU

புதுடெல்லி: ‘சகோதர, சகோதரிகள் போராட்டங்களின் துணைவர்கள் மற்றும் நினைவுகளை உருவாக்குபவர்கள்’ என்று காங்கிரஸ் பொதுச்செயலாளர் பிரியங்கா காந்தி தெரிவித்துள்ளார். ரக்ஷாபந்தனை முன்னிட்டு அவர் தனது சகோதரர் ராகுல் காந்தியுடனான புகைப்படத் தொகுப்பையும் பகிர்ந்துள்ளார்.

இதுகுறித்து அவர் தனது எக்ஸ் பக்கத்தில் வெளியிட்டுள்ள பதிவில், "சகோதர - சகோதரிகளுக்கு இடையிலான உறவு ஒரு மலர் தோட்டம் போன்றது. அது நம்பிக்கை, அன்பு மற்றும் பரஸ்பர புரிதல், பல வண்ண நினைவுகள், ஒற்றுமையின் கதைகள் மற்றும் நட்பினை ஆழமாக்கவதற்கான உறுதிப்பாடுகள் போன்றவைகளின் அடிப்படையில் மலர்ந்திருப்பது" என்று தெரிவித்துள்ளார்.

சகோதர சகோதரிகள் என்பவர்கள் போராட்டத்தின் பங்காளிகள், நினைவுகளை உருவாக்குபவர்கள்... அனைவருக்கும் ரக்ஷா பந்தன் வாழ்த்துக்கள்" என்று தெரிவித்துள்ளார். மேலும் ராகுல் காந்தியுடனான சிறுவயது உட்பட புகைப்படத் தொகுப்பு ஒன்றையும் பகிர்ந்துள்ளார்.

அதேபோல் மக்களவை எதிர்க்கட்சித் தலைவர் ராகுல் காந்தி தனது எக்ஸ் தள பக்கத்தில் வெளியிட்டுள்ள பதிவில், "சகோதர, சகோதரிகளுக்கு இடையிலான பிரிக்க முடியாத அன்பு மற்றும் பிணைப்பின் பண்டிகையான ரக்ஷா பந்தன் நாளில் நாட்டுமக்கள் அனைவருக்கும் எனது நல்வாழ்த்துக்கள். இந்த பாதுகாப்பின் பிணைப்பு உங்களின் புனிதமான உறவை உறுதியாக இணைக்கட்டும்" என்று தெரிவித்துள்ளார்.

காங்கிரஸ் தேசிய தலைவர் மல்லிகார்ஜுன கார்கே வெளியிட்டுள்ள பதிவில், " சகோதர,சகோதரிகளுக்கு இடையிலான மகத்தான அன்பு, பிரிக்கமுடியாத பிணைப்பு மற்றும் விலைமதிப்பற்ற உறவு ஆகியவைகளை குறிக்கும் புனிதமான ரக்ஷாபந்தன் நாளில் அனைவருக்கும் மனமார்ந்த நல்வாழ்த்துகள். சாதி மதங்களைக் கடந்து பரஸ்பர சகோதரத்துவத்தை வளர்க்கும் தனித்துவமான ரக்ஷாபந்தன் பண்டிகை சகோதரத்துவத்தையும், இந்தியச் சமூகத்தில் பெண்களின் முக்கியத்துவத்தை வலியுறுத்துகிறது.

இந்த ராக்கிப் பண்டிகை மக்களின் வாழ்வில் அன்பு, நல்லிணக்கம், ஒற்றுமை மற்றும் பரஸ்பர நல்லுறவு ஆகியவைகளை வலுப்படுத்தும் என்று நம்புகிறோம்" இவ்வாறு தெரிவித்துள்ளார்.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE