சிரியாவுக்கு உதவி: 1,400 கிலோ புற்றுநோய் எதிர்ப்பு மருந்துகளை அனுப்பியது இந்தியா!

By KU BUREAU

புதுடெல்லி: மனிதாபிமான உதவியாக இந்தியா சுமார் 1400 கிலோ புற்றுநோய் எதிர்ப்பு மருந்துகளை சிரியாவுக்கு அனுப்பியுள்ளதாக மத்திய வெளியுறவு அமைச்சகம் தெரிவித்துள்ளது.

இதுகுறித்து மத்திய வெளியுறவு அமைச்சகத்தின் அதிகாரப்பூர்வ செய்தித் தொடர்பாளர் ரந்தீர் ஜெய்ஸ்வால் தனது எக்ஸ் பக்கத்தில், ‘ சிரியாவிற்கு இந்தியா மனிதாபிமான உதவியை அனுப்புகிறது. இந்தியா தோராயமாக 1400 கிலோ புற்றுநோய் எதிர்ப்பு மருந்துகளை சிரியாவிற்கு அனுப்பியுள்ளது. சிரிய அரசாங்கத்திற்கும், அதன் மக்களுக்கும் புற்றுநோயை எதிர்த்துப் போராட இது உதவும்" என்று அந்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.


சிரியாவும், இந்தியாவும் வரலாற்று ரீதியாக ஆழமாக வேரூன்றிய நல்லுறவைப் பகிர்ந்து கொண்டுள்ளன. சிரியாவில் உள்ள இந்திய தூதரகம் அந்த நாட்டில் உள்நாட்டு மோதல்களின்போது திறந்தே உள்ளது. சிரியாவிலிருந்து சுற்றுலாப் பயணிகள், வணிகர்கள் மற்றும் நோயாளிகள் எனப் பலர் இந்தியாவிற்கு வருகை தருகின்றனர்.

மேலும், உதவித்தொகை திட்டங்கள் மற்றும் பயிற்சி வகுப்புகள் மூலம் பல ஆண்டுகளாக சிரிய இளைஞர்களின் திறனை வளர்ப்பதில் இந்தியா பெரும் பங்களிப்பை அளித்துள்ளது என்று அதிகாரப்பூர்வ வெளியுறவுத்துறை தெரிவித்துள்ளது.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE