உண்மையை மறைக்க மம்தா பானர்ஜி அரசு முயற்சி: மருத்துவர்கள் குற்றச்சாட்டு

By KU BUREAU

கொல்கத்தா: பெண் மருத்துவர் கொலைக்கு நீதி கோரி போராட்டத்தில் ஈடுபட்டிருக்கும் கொல்கத்தா மருத்துவர்கள் கூறியதாவது:

கடந்த 8-ம் தேதி இரவு ஆர்.ஜி.கர் அரசு மருத்துவமனையில் தொடர்ச்சியாக 36 மணி நேரம் பணியில் இருந்த பெண் மருத்துவர், நள்ளிரவு 2 மணிக்கு மருத்துவர்களுக்கான ஓய்வறைக்கு சென்றுள்ளார். ஆனால் அவரது உடல் கருத்தரங்கு கூடத்தில் மீட்கப்பட்டு இருக்கிறது.

உயிரிழந்த பெண் மருத்துவரின் கால்கள் 90 டிகிரி அளவுக்கு பிரிக்கப்பட்டு இருக்கிறது. இரு நபர்கள் கால்களை பிடித்து இழுத்திருந்தால் மட்டுமே இந்த அவல நிலை ஏற்படும். பெண் மருத்துவரின் கை, கால், வயிறு, உதடு, கழுத்து, பிறப்பு உறுப்பில் கொடூர காயங்கள் ஏற்பட்டு உள்ளன. அவரின் பிறப்பு உறுப்பில் 151 மில்லிகிராம் விந்தணு இருந்துள்ளது. எனவே இந்த கொலையில் பலர் ஈடுபட்டிருக்கக்கூடும் என்று உறுதியாக சந்தேகிக்கிறோம்.

தற்போது கைது செய்யப்பட்டிருக்கும் சஞ்சய் ராய், உயிரிழந்த பெண் மருத்துவரை சுமார் ஒரு மாதம் வேவு பார்த்ததாகக் கூறப்படுகிறது. அரசு மருத்துவமனையின் சில முறைகேடுகளை மறைக்கவே பெண் மருத்துவரை திட்டமிட்டு கொலை செய்திருக்கக்கூடும் என்று சந்தேகிக்கிறோம். முதல்வர் மம்தா பானர்ஜி தலைமையிலான திரிணமூல் காங்கிரஸ் அரசு பல்வேறு வகைகளில் உண்மையை மறைக்க முயற்சி செய்கிறது. எனினும் எங்களது சந்தேகம், கேள்விகளுக்கு சிபிஐ விசாரணையில் தெளிவான பதில் கிடைக்கும் என்று எதிர்பார்க்கிறோம்.

இவ்வாறு மருத்துவர்கள் தெரிவித்தனர்

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE