நீண்டதூர இலக்கை தாக்கும் கிளைடு வெடிகுண்டு சோதனை வெற்றி

By KU BUREAU

புதுடெல்லி: பாதுகாப்பு ஆராய்ச்சி மற்றும் மேம்பாட்டு நிறுவனத்துக்கு (டிஆர்டிஓ) சொந்தமாக ஹைதராபாத்தின் இமாரத் நகரில் உள்ள ஆராய்ச்சி மையம் கவுரவ் என்ற பெயரில் நீண்டதூர இலக்கை தாக்கும் திறன் வாய்ந்த கிளைடு வெடிகுண்டை வடிவமைத்தது.

அதானி டிபன்ஸ் மற்றும் பாரத் போர்ஜ் நிறுவனங்கள் இணைந்து உள்நாட்டு தொழில்நுட்பத்தில் இந்த வெடிகுண்டைதயாரித்தன. ஒடிசா கடற்கரைபகுதியில் விமானப்படையின்சு-30 எம்கே-1போர் விமானத்தில் இருந்தபடி முதல் முறையாக கவுரவ் என்ற கிளைடு வெடிகுண்டு நேற்று பரிசோதித்துப் பார்க்கப்பட்டது. அப்போது லாங் வீலர்ஸ் தீவில் பொருத்தப்பட்டிருந்த இலக்கை இந்த வெடிகுண்டு துல்லியமாக தாக்கியதாக டிஆர்டிஓ தெரிவித்துள்ளது

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE