வயநாடு நிலச்சரிவில் உயிரிழந்தோர் குடும்பங்களுக்கு ரூ.6 லட்சம் நிவாரணம் - முதல்வர் பினராயி விஜயன் அறிவிப்பு

By KU BUREAU

கேரளா: வயநாடு நிலச்சரிவில் சிக்கி உயிரிழந்தோர் குடும்பங்களுக்கு தலா ரூ.6 லட்சம் வழங்கப்படும் என முதல்வர் பினராயி விஜயன் அறிவித்துள்ளார். நிலச்சரிவால் படுகாயமடைந்த நபர்களுக்கு ரூ.50,000 நிதியுதவி வழங்கப்படும் எனவும் அறிவிக்கப்பட்டுள்ளது.

இந்நிலையில் உயிரிழந்தவர்களின் குடும்பத்திற்கு மாநில முதல்வர் பினராயி விஜயன் நிவாரண உதவியை அறிவித்திருக்கிறார். இதுகுறித்து பேசிய பினராயி விஜயன், ‘வயநாடு நிலச்சரிவில் உயிரிழந்தவர்களின் குடும்பத்துக்கு ரூ. 6 லட்சம் நிவாரணம் வழங்கப்படும். 60 சதவிகிதத்துக்கு மேல் உடலில் குறைபாடு ஏற்பட்டவர்களுக்கு ரூ. 75,000, 40 - 50 சதவிகிதம் உடலில் குறைபாடு ஏற்பட்டவர்களுக்கு ரூ. 50,000 வழங்கப்படும். படுகாயமடைந்தவர்களுக்கு கூடுதலாக ரூ. 50,000 வழங்கப்படும்.

வீடுகளை இழந்து நிவாரண முகாம் மற்றும் உறவினர்களின் வீடுகளில் தங்கியுள்ளவர்களுக்கு மாதம் ரூ. 6,000 வாடகை உதவித் தொகையாக வழங்கப்படும். இந்த நிவாரணங்கள் முதல்வரின் பேரிடர் நிவாரண நிதியில் இருந்து ஒதுக்கீடு செய்யப்படும்.

நிலச்சரிவால் பாதிக்கப்பட்ட அனைவருக்கும் இலவச தங்கும் இடங்களை அரசு ஏற்படுத்தியுள்ளது. அந்த இடங்களில் தங்க வாடகை வசூலிக்கப்படாது. கல்வி சான்றிதழ், அரசு அடையாள அட்டைகள் உள்ளிட்டவை மீண்டும் வழங்க அனைத்து துறைகளும் நடவடிக்கை மேற்கொண்டு வருகின்றது" என்று தெரிவித்துள்ளார்.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE