ராகுல் மிகவும் ஆபத்தானவர்: பாஜக எம்.பி. கங்கனா ரனாவத் கருத்து

By KU BUREAU

புதுடெல்லி: அதானி நிறுவனம் வெளிநாடு களில் உருவாக்கிய போலி நிறுவ னங்களில் செபி அமைப்பின் தலைவர் மாதபி புச் பங்குகளை வைத்துள்ளதாக ஹிண்டன்பர்க் நிறுவனம் குற்றம் சாட்டியிருந்தது.

இதையடுத்து, ஹிண்டன்பர்க் அறிக்கை தொடர்பாக காங்கிரஸ் மூத்த தலைவரும், மக்களவை எதிர்க் கட்சி தலைவருமான ராகுல் காந்தி விமர்சித்து இருந்தார். செபியின் நேர்மை சமரசத்துக்கு உள்ளாகி இருக்கிறது என்று அவர் குற்றம் சாட்டியிருந்தார்.

இந்நிலையில் நேற்று நடிகை கங்கனா ரனாவத் தனது எக்ஸ் பக்கத்தில் கூறி இருப்பதாவது:

ராகுல் மிகவும் ஆபத்தானமனிதர். விஷமி. அழிவுகரமானவர். அவரால் பிரதமராக முடியாவிட்டால் இந்த நாட்டை அழித்துவிடலாம் என்பதே அவரது செயல்திட்டமாக இருக்கிறது.

நமது பங்குச் சந்தையை குறிவைத்து வெளியிடப்பட்ட ஹிண்டன்பெர்க் அறிக்கை, ராகுல் காந்தி ஆதரவுடன் வெளியானது என்பது நேற்று இரவு உறுதியானது. இந்த நாட்டின் பாதுகாப்பையும், பொருளாதாரத்தையும் சீர்குலைக்க அவர்அனைத்து முயற்சிகளையும் செய்து வருகிறார்.

நீங்கள் (ராகுல் காந்தி) வாழ்நாள் முழுவதும் எதிர்க்கட்சியில் அமர தயாராக இருங்கள். நாட்டு மக்கள் உங்களை ஒருபோதும் பிரதமராக்க மாட்டார்கள். நீங்கள் ஓர் அவமானம். இவ்வாறு நடிகை கங்கனா ரனாவத் கூறியுள்ளார்.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE