பல நூற்றாண்டுகளாக மண்ணில் புதைந்த ராமர் கோயில் அகழாய்வில் கண்டுபிடிப்பு! பக்தர்கள் பரவசம்!

By காமதேனு

கர்நாடக மாநிலத்தில் பல நூற்றாண்டுகளுக்கு முன்பு மண்ணில் புதைந்த ராமர் கோயில் அகழாய்வில் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

அயோத்தி ராமர் கோயில்

அயோத்தியில் கட்டப்பட்டுள்ள ராமர் கோயில் கும்பாபிஷேகம் வரும் ஜனவரி 22ம் தேதி நடைபெற உள்ளது. அன்று நடைபெற உள்ள பிரானபிரதிஷ்டையில் பிரதமர் மோடி கலந்துகொள்ள உள்ளார். இந்த நாளுக்காக உத்தரப்பிரதேச மாநிலமே விழாக்கோலம் பூண்டுள்ளது. இந்நிலையில், கர்நாடகாவில் மண்ணிற்குள் பல நூற்றாண்டுகளுக்கு முன்னர் புதைந்துள்ள ராமர்கோயில் அகழாய்வு மூலம் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது பக்தர்களைப் பரவசப்படுத்தியுள்ளது.

கர்நாடகா ராமர் கோயில்

கர்நாடக மாநிலம் பெலகாவி மாவட்டத்தில் உள்ளது சிக்கோடி தாலுகா. இதற்கு உட்பட்டது சடலாகா என்ற சிறிய நகரம். இந்த பகுதியில் தூத்கங்கா என்ற ஆறு பாய்கிறது. இந்த ஆற்றின் கரையில் பல நூற்றாண்டுகளுக்கு முன்னர் ராமர் கோயில் ஒன்று இருந்ததாகவும், அது மண்ணிற்குள் புதைந்து போனதாகவும் கூறப்பட்டு வந்தது.

கர்நாடகா ராமர் கோயில்

இந்நிலையில், அயோத்தியில் ராமர் கோயில் கும்பாபிஷேகம் வரும் ஜனவரி 22ம் தேதி நடைபெற உள்ள நிலையில், சடலாகா பகுதியைச் சேர்ந்த மக்கள் தங்கள் பகுதியில் புதைந்து போன ராமர் கோயிலை மீண்டும் மீட்கத் திட்டமிட்டனர். இதற்காக, அந்த ஊர் மக்கள் ஒன்று கூடி, கோயில் இருந்ததாக கூறப்பட்ட இடத்தில் அகழாய்வு மேற்கொண்டனர். அங்கு நூற்றுக்கணக்கான வருடங்களுக்கு முன்னர் கட்டப்பட்ட ராமர் கோயில் ஒன்று இருப்பதும், அதன் கட்டிடம் முழுமையாக மண்ணிற்குள் புதையுண்டிருந்ததும் வெளிச்சத்திற்கு வந்தது.

கர்நாடகா ராமர் கோயில்

இதன் மூலம் அந்த மக்கள் தங்கள் முன்னோர்கள் கூறிய இடத்தில் ராமர் கோயில் இருந்தது உண்மை என்றும், அயோத்தியில் ராமர் பிரானபிரதிஷ்டை மேற்கொள்ளும் நிலையில், இங்கும் ராமர் கோயில் கண்டறியப்பட்டது மகிழ்ச்சியளிப்பதாகத் தெரிவித்துள்ளனர். மேலும், இந்த கோயில் தொடர் மழை மற்றும் வெள்ளப்பெருக்கு காரணமாகக் கோயில் மண்ணிற்குள் புதைந்ததாகவும் அந்த மக்கள் கூறுகின்றனர். இது பெலகாவி மாவட்ட மக்களிடையே பெரும் பரபரப்பையும் ஏற்படுத்தியுள்ளது.

இதையும் வாசிக்கலாமே...


வேட்டியை மடித்து கட்டிக்கொண்டு களமிறங்கிய அமைச்சர்; அதிர்ந்த தொண்டர்கள்

தமிழகம் முழுவதும் இன்று டாஸ்மாக் கடைகளுக்கு விடுமுறை!

பிக் பாஸ்7 முடிவில் போட்டியாளர்களுக்கு கமல் கொடுத்த சர்ப்ரைஸ்!

தமிழகம் வருகிறார் பிரதமர் மோடி... ஸ்ரீரங்கத்தில் சுவாமி தரிசனம்!

இன்றும், நாளையும் ஆரஞ்சு அலர்ட்... பனிமூட்டத்தால் 17 விமானங்கள் ரத்து!

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE