மத்திய அமைச்சரவை செயலாளராக டி.வி.சோமநாதன் நியமனம்!

By KU BUREAU

டெல்லி: மத்திய அமைச்சரவை செயலாளராக தமிழ்நாட்டைச் சேர்ந்த ஐஏஎஸ் அதிகாரி டி.வி.சோமநாதன் நியமனம் செய்யப்பட்டுள்ளார். இவர் ஆக.30 முதல் அடுத்த 2 ஆண்டுகளுக்குப் பதவி வகிப்பார்.

மத்திய அமைச்சரவை செயலராக ஐஏஎஸ் அதிகாரி டி.வி.சோமநாதன் இன்று நியமனம் செய்யப்பட்டுள்ளாா். அதற்கான ஒப்புதலை மத்திய அமைச்சரவையின் நியமனங்கள் குழு அளித்துள்ளது. மத்திய அரசின் நிதித் துறை செயலாளராக பதவி வகித்து வந்த அவர் தற்போது, மத்திய கேபினட் செயலாளராக நியமனம் செய்யப்பட்டுள்ளார்.

முன்னதாக டி.வி.சோமநாதன் (2010-11)கார்ப்பரேட் விவகார அமைச்சகத்தின் இணைச் செயலாளராகவும், 2015 முதல் 2017 வரை பிரதமரின் இணைச் செயலாளராக/ கூடுதல் செயலாளராகவும் பொறுப்பு வகித்துள்ளார்.

1987ஆம் ஆண்டு பேட்ச் ஐ.ஏ.எஸ். அதிகாரின டி.வி.சோமநாதன் தேசிய அளவில் 2வது ரேங்க் பெற்று சிவில் சர்வீஸ் பணியில் சேர்ந்தார். அவர் தனது பேட்சில் சிறந்த ஐ.ஏ.எஸ் ப்ரோபேஷனராக இருந்ததற்காக அவருக்கு தங்கப் பதக்கம் பெற்றுள்ளார். கருணாநிதி தமிழக முதல்வராக இருந்தபோது முதல்வரின் செயலாளராக பணியாற்றியவர். தமிழக அரசின் துணைச் செயலாளர் (பட்ஜெட்), இணை விஜிலென்ஸ் கமிஷனர், மெட்ரோ வாட்டர் நிர்வாக இயக்குநர், முதல்வரின் செயலாளர், கூடுதல் தலைமைச் செயலாளர் மற்றும் வணிக வரி ஆணையர் உள்ளிட்ட பல்வேறு உயர் பதவிகளில் பணியாற்றியுள்ளார்.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE