பரபரப்பு...மேற்கு வங்க லெஸ்பியன் ஜோடி உ.பி கோயிலில் திருமணம்!

By காமதேனு

மேற்கு வங்க மாநிலத்தைச் சேர்ந்த லெஸ்பியன் ஜோடி, உத்தரப் பிரதேச மாநிலத்தில் கோயிலில் திருமணம் செய்து கொண்டனர்.

மேற்கு வங்க மாநிலம், தெற்கு 24 பர்கானாஸ் மாவட்டத்தைச் சேர்ந்தவர்கள் ஜெயஸ்ரீ ராகுல் (28), ராக்கி தாஸ் (23). லெஸ்பியன் ஜோடியான இவர்கள் உத்தரப் பிரதேசத்தின் தியோரியா மாவட்டத்தில் உள்ள ஒரு கோயிலில் திருமணம் செய்து கொண்டனர்.

லெஸ்பியன் ஜோடி திருமணம்.

ஜெயஸ்ரீ ராகுலும், ராக்கி தாஸும் தியோரியாவில் முன்னா பால் என்பவரது இசைக்குழுவில் பணிபுரிந்து வருகின்றனர். இங்குதான் அவர்கள் இடையே பழக்கம் ஏற்பட்டு ஒருவருக்கொருவர் காதலித்தனர். இதையடுத்து இருவரும் திருமணம் செய்துகொள்ள முடிவு செய்தனர்.

இதுகுறித்து முன்னா பால் கூறுகையில், "ஜெயஸ்ரீ ராகுலும், ராக்கி தாஸும் தங்கள் திருமணத்துக்கான சான்றளிக்கப்பட்ட பிரமாணப் பத்திரத்தைப் பெற்றனர். அதைத் தொடர்ந்து கடந்த திங்கள்கிழமை தியோரியா, பட்பர் ராணியில் உள்ள பாகதா பவானி கோயிலில் பாரம்பரிய முறைப்படி திருமணம் செய்து கொண்டனர்.

ஜெயஸ்ரீ ராகுல், ராக்கி தாஸ்.

இவர்கள் இருவரும் முதலில் திர்கேஷ்வர்நாத் கோயிலில் தான் திருமணம் செய்துகொள்ள முடிவு செய்திருந்தனர். ஆனால், உயர் அதிகாரிகளிடம் அனுமதி பெறுவதில் தடை ஏற்பட்டதால் பவானி கோயிலில் திருமணம் செய்துகொண்டனர்” என்றார்.

திருமணத்துக்குப் பிறகு, இந்த தம்பதியினர் தங்கள் காதல் எவ்வாறு தொடங்கியது, இருவரும் எதிர்கொண்ட சவால்கள் என்னென்ன, இறுதியில் ஒருவருக்கொருவர் தங்கள் உறுதிப்பாட்டை வலுப்படுத்தியது எவ்வாறு என்பதை பகிர்ந்து கொண்டனர்.

இதையும் வாசிக்கலாமே...

இன்று முதல் நெல்லை வரை பொங்கல் சிறப்பு ரயில்கள் அறிவிப்பு!

‘இந்தியாவின் 4 சங்கராச்சாரியார்களும், ராமர் கோயில் விழாவை புறக்கணித்திருக்கிறார்கள்’

சென்னையில் அயலகத் தமிழர் தினவிழா: 58 நாடுகளைச் சேர்ந்தவர்கள் பங்கேற்பு!

'ஜாலியாக இருக்கலாம்... தனியாக வா' 9-ம் மாணவிக்கு ஆபாச மெசேஜ் அனுப்பிய ஆசிரியர்!

ப்பா... திக்குமுக்காடி போன ரசிகர்கள்... வைரலாகும் நடிகையின் போட்டோஷூட்!

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE