காணாமல் போன பூனையை கண்டுபிடித்து தருவோருக்கு ரூ.1 லட்சம் சன்மானம் வழங்கப்படும் என அந்த செல்லப் பிராணியின் வளர்ப்போர் போஸ்டர் ஒட்டி தேடி வருகின்றனர்.
மனிதர்கள் தொடர்பான ’காணவில்லை’ போஸ்டர்களை சாதாரணமாக கண்டிருப்போம். அன்புக்குரியவர்கள் வீட்டைவிட்டு காணாது போவது, குழந்தைகள், முதியவர்கள் மற்றும் மனநலன் குன்றியோர் தொலைந்து போவது உள்ளிட்ட சம்பவங்களில், உரியோர் புகைப்படத்துடன் போஸ்டர் அடித்து ஊரெல்லாம் அதனை ஒட்டி தேடுவார்கள். குற்ற வழக்குகளில் சிக்கியவர்களை வளைக்க காவல்துறையினர் ஒட்டும் போஸ்டர்கள் தனி.
வெகு அரிதாகவே வளர்ப்பு பிராணிகளை தேடி போஸ்டர் ஒட்டப்படுவதும் நடக்கும். அப்படியொரு சம்பவம் உத்தரபிரதேசம் மாநிலம் நொய்டாவில் அரங்கேறி உள்ளது. செக்டார் 62 பகுதியில் வசிக்கும் அஜய் குமார் என்பவர் தனது செல்லப் பிராணியைத் தேடி டெல்லி வரை போஸ்டர்களை ஒட்டியுள்ளார். பூனையின் அழகான புகைப்படம் மற்றும் அதுதொடர்பான அடையாள விவரங்கள் ஆகியவற்றுடன் சன்மானத்தொகை உள்ளிட்டவை அந்த போஸ்டரில் இடம்பெற்றுள்ளன.
ஒன்றரை வயதாகும் ஆண் பாரசீகப் பூனையை கண்டுபிடித்து தருவோர் அல்லது அதன் இருப்பிடம் குறித்து தகவல் தருவோருக்கு ரூ.1 லட்சம் பரிசு என அந்த போஸ்டரில் தெரிவிக்கப்பட்டுள்ளது. பூனையின் அங்க அடையாளமாக கழுத்தில் வெள்ளை முடி இருக்கும் என்ற தகவல் தரப்பட்டுள்ளது. பூனையின் பெயரில் தொடங்கி, தகவல் தொடர்புக்கான அலைபேசி எண் ஆகியவற்றுடன் காணாது போன பூனையின் புகைப்படம் அடங்கிய அந்த போஸ்டர் இணையவெளியில் வைரலாகி வருகிறது.
இதையும் வாசிக்கலாமே...
முரசொலி அலுவலக பஞ்சமி வழக்கில் நாளை மறுதினம் தீர்ப்பு... உயர் நீதிமன்றம் அறிவிப்பு!
அம்மாவை தெருவில் விட்டுச்சென்ற மகள்... காப்பகத்தில் சேர்த்த பொதுமக்கள்!
பேச்சுவார்த்தை தோல்வி... நாளை முதல் பேருந்துகள் ஓடாது... தொழிற்சங்கங்கள் அறிவிப்பு!
1200 வீடுகள் தீக்கிரை... தப்பிய உயிர்கள்... நிர்கதியாய் நிற்கும் அகதிகள்!
படப்பிடிப்பில் நயன்தாரா... திடீரென திரண்ட ரசிகர்களால் பரபரப்பு!