காந்தி ஜெயந்தி தினத்தில் டெல்லியில் ஒன்றரை கோடிக்கு கதர் விற்பனை!

By காமதேனு

டெல்லி கன்னாட்பிளேஸ் பகுதியில் உள்ள காதிபவனில் காந்தி ஜெயந்தி தினத்தில் மட்டும் ஒன்றை கோடி ரூபாய்க்கு கதர் பொருட்கள் விற்பனை செய்யப்பட்டிருப்பதற்கு பிரதமர் மோடி பாராட்டு தெரிவித்துள்ளார்

மகாத்மா காந்தி பிறந்த தினமான அக்டோபர் 2ம் தேதி, கதர் பொருட்களை வாங்குமாறு பொதுமக்களுக்கு பிரதமர் மோடி அழைப்பு விடுத்திருந்தார். அதன்படி, டெல்லியில் கன்னாட்பிளேஸ் பகுதியில் உள்ள காதி பவனில் காந்தி ஜெயந்தி தினத்தில் ரூ.1 கோடியே 52 லட்சத்து 45 ஆயிரம் மதிப்புள்ள கதர் மற்றும் கிராம தொழில் பொருட்கள் விற்பனை செய்யப்பட்டன. இது, சாதனை அளவாகும். இதற்கு பிரதமர் மோடி பாராட்டு தெரிவித்துள்ளார்.

அவர் தனது சமூக வலைதள பக்கத்தில், கதர் பொருட்கள் விற்பனையில் படைக்கப்பட்டுள்ள சாதனை, கதர் மீதான பொதுமக்கள் உணர்வுகளின் வலிமையான அடையாளத்தை காட்டுகிறது. மக்களுக்கு பிடித்திருப்பதால், கதர் விற்பனை தொடர்ந்து புதிய சாதனைகள் படைக்கும் என்று நம்புகிறேன்.

அத்துடன், 'தற்சார்பு இந்தியா' என்ற தொலைநோக்கு பார்வையை இது வலுப்படுத்தும்' என்று தெரிவித்துள்ளார்.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE