17 மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்பு- வானிலை ஆய்வு மையம் தகவல்!

By காமதேனு

சென்னை உட்பட பல மாவட்டங்களில் நேற்று முதலே லேசானது முதல் மிதமான மழை பெய்து வரும் நிலையில், அடுத்த மூன்று மணி நேரத்தில் டெல்டா மாவட்டங்கள் உள்ளிட்ட 17 மாவட்டங்களில் மழை பெய்யக்கூடும். ஒருசில இடங்களில் கனமழைக்கு வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

கிழக்கு திசை காற்றின் வேகமாறுபாடு காரணமாக, இன்று (ஜன. 5) தமிழ்நாட்டில் ஓரிரு இடங்களிலும், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளிலும் இடி மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும். தேனி, திண்டுக்கல் மற்றும் நீலகிரி மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் கனமழை பெய்ய வாய்ப்பு உள்ளது. தமிழகத்தில் ஓரிரு இடங்களில் அதிகாலை வேளையில் லேசான பனிமூட்டத்திற்கு வாய்ப்புள்ளது என சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்திருந்தது.

இந்த நிலையில் அடுத்த மூன்று மணி நேரத்தில் திருவள்ளூர், காஞ்சிபுரம், செங்கல்பட்டு, சென்னை , நீலகிரி, கோயம்புத்தூர், திருப்பூர், திண்டுக்கல், நாமக்கல், கரூர், திருச்சி, சேலம், கிருஷ்ணகிரி, திருப்பத்தூர், சிவகங்கை, மயிலாடுதுறை, நாகப்பட்டினம் உள்ளிட்ட இடங்களில் லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும். ஒருசில இடங்களில் கனமழைக்கு வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE