ஆக.15 சுதந்திரதின விழாவில் அமைச்சர் அதிஷி மூவர்ணக்கொடியை ஏற்றுவார்: அரவிந்த் கேஜ்ரிவால் 

By KU BUREAU

புதுடெல்லி: ஆக.15-ம் தேதி நடைபெற இருக்கும் சுதந்திர தினவிழாவில் தனக்கு பதிலாக அமைச்சர் அதிஷி தேசிய கொடியை ஏற்றுவார் என டெல்லி முதல்வர் அரவிந்த் கேஜ்ரிவால், துணைநிலை ஆளுநருக்கு கடிதம் எழுதியுள்ளதாக ஆம் ஆத்மி கட்சி புதன்கிழமை தெரிவித்துள்ளது.

இதுகுறித்து ஆம் ஆத்மி கட்சி, "ஆகஸ்ட் 15ம் தேதி சுதந்திர தினத்தின் போது தனக்கு பதிலாக அமைச்சர் அதிஷி மூவர்ணக்கொடியை ஏற்றுவார் என்று சிறையில் இருந்து அரவிந்த் கேஜ்ரிவால், துணைநிலை ஆளுநர் வி.கே. சக்சேனாவுக்கு கடிதம் எழுதியுள்ளார்" என ஆம் ஆத்மி கட்சித் தெரிவித்துள்ளது.

ஒவ்வொரு ஆண்டும் சுதந்திர தினவிழாவை டெல்லி அரசு சத்ரசால் மைதானத்தில் கொண்டாடுகிறது. அதில் முதல்வர் கேஜ்ரிவால் உரையாற்றுவார். கடந்த 2015ம் ஆண்டு முதல் இந்த அரசு விழாவில் அரவிந்த் கேஜ்ரிவால் கொடியேற்றி வருகிறார்.

தற்போது முதல்வர் அரவிந்த் கேஜ்ரிவால், டெல்லி மதுபான ஊழல் தொடர்பான பணமோசடி வழக்கில் கைது செய்யப்பட்டு திகார் சிறையில் அடைக்கப்பட்டுள்ளார்.

டெல்லி மதுபான ஊழல் வழக்கில், மணீஷ் சிசோடியா கைது செய்யப்பட்டு, பின்னர் தனது துணை முதல்வர் பதவியை ராஜினாமா செய்ததைத் தொடர்ந்து, கடந்த 2023ம் ஆண்டு அதிஷி அமைச்சராக நியமிக்கப்பட்டார்.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE