புதுடெல்லி: போர் விமானங்களில் பயன்படுத்துவதற்காக 200 அஸ்த்ரா மார்க் 1 ஏவுகணைகளை பாரத் டைனமிக்ஸ் நிறுவனம் (பிடிஎல்) தயாரிக்கஇந்திய விமானப்படை ஒப்புதல் அளித்துள்ளது.
இந்திய பாதுகாப்பு படைகளில் உள்நாட்டு தொழில்நுட்பத்தில் தயாரிக்கப்படும் ஆயுதங்கள் அதிகளவில் பயன்படுத்தப்படுகின்றன. போர் விமானங்களில் பயன்படுத்துவதற்காக அஸ்த்ரா மார்க் 1 ஏவுகணைகளை ராணுவ ஆராய்ச்சிமேம்பாட்டு மையம் (டிஆர்டிஓ)மற்றும் பாரத் டைனமிக்ஸ் லிமிடெட்(பிடிஎல்) ஆகியவை இணைந்துதயாரித்தன. ரூ.2,900 கோடி மதிப்பிலான இத்திட்டத்துக்கு கடந்த2022-23-ம் ஆண்டு ஒப்புதல் வழங்கப்பட்டது.
இந்த ஏவுகணைகளை சுகோய் மற்றும் தேஜஸ் விமானங்களில் பயன்படுத்த முடியும். அஸ்த்ரா ஏவுகணை மூலம் 300 கி.மீ தூரம்உள்ள வான் இலக்குகளை போர்விமானத்திலிருந்து தாக்க முடியும்.இந்த ஏவுகணைகளின் பரிசோதனை வெற்றிகரமாக முடிந்ததால், அஸ்த்ரா ஏவுகணை விமானப்படையில் சேர்க்கப்பட்டது.
இந்நிலையில் இந்திய விமானப்படையின் துணைத் தளபதி ஏர்மார்ஷல் அசுதோஷ் தீக்சித் சமீபத்தில்ஹைதராபாத் வந்து டிஆர்டிஓஆய்வு மையத்தை பார்வையிட்டார். அப்போது 200 அஸ்த்ரா ஏவுகணைகளை பிடிஎல் நிறுவனம் தயாரிக்க ஒப்புதல் கொடுக்கப்பட்டது