’அதான் காங்கிரஸ் ஆட்சிக்கு வந்துவிட்டதே...கரண்ட் பில் கட்டமாட்டோம்’ - கர்நாடக கிராமங்களில் சலசலப்பு!

By காமதேனு

நாங்கள் கரண்ட் பில் கட்ட மாட்டோம். எங்களுக்கு 200 யூனிட் இலவச மின்சாரம் வழங்கப்படும் என்று காங்கிரஸின் வாக்குறுதி அளிக்கப்பட்டுள்ளது என்று கர்நாடகாவைச் சேர்ந்த சில கிராம மக்கள் கூறியதால் மின்வாரியத்தினர் அதிர்ச்சியில் உறைந்துள்ளனர்

சமீபத்தில் நடந்துமுடிந்த கர்நாடக சட்டசபை தேர்தலில் வெற்றி பெற்ற காங்கிரஸ் கட்சி, மாநிலத்தில் ஆட்சி அமைக்கும் பணியில் மும்முரமாக ஈடுபட்டு வருகிறது. ஆனால் அதற்குள் கர்நாடகாவின் சில பகுதிகளில் அக்கட்சி அளித்த வாக்குறுதிகளை நிறைவேற்ற வேண்டும் என்று மக்கள் கோரிக்கை விடுத்து வருகின்றனர்.

காங்கிரஸின் முக்கிய தேர்தல் வாக்குறுதிகளில் ஒன்று 200 யூனிட் இலவச மின்சாரம் வழங்குவது ஆகும். இதனால் தற்போது, ​​கொப்பல், கலபுர்கி, சித்ரதுர்கா போன்ற மாவட்டங்களில் உள்ள கிராமங்களைச் சேர்ந்த மக்கள் மின் கட்டணம் செலுத்த மறுத்ததாக கூறப்படுகிறது. காங்கிரஸ் ஆட்சிக்கு வந்தால் இலவச மின்சாரம் வழங்குவதாக அறிவித்துள்ளதால், கட்டணம் செலுத்த வேண்டிய அவசியம் இல்லை என பல கிராமங்களைச் சேர்ந்த மக்கள் தெரிவிக்கின்றனர். மின்வாரிய அதிகாரிகள் கிராமங்களுக்கு சென்று மீட்டர் ரீடிங் செய்யும் போது இந்த சுவாரஸ்ய சம்பவங்கள் நடந்தது. சித்ரதுர்காவில் ஒரு பெண்ணிடம் மின் கணக்கீட்டாளர் பில் கொடுத்தபோது, ​​அவர் கட்டணத்தை செலுத்த மறுத்து, “சித்தராமையாவும், டி.கே.சிவக்குமாரும் எங்கள் கட்டணத்தை செலுத்தட்டும். தேர்தலுக்குப் பிறகு 200 இலவச யூனிட்கள் என்ற உத்தரவாதத்தை விரைவில் அமல்படுத்துவோம் என்றார்கள். அதனால் இங்கு வராதீர்கள். நாங்கள் கட்டணத்தை செலுத்த மாட்டோம். வாக்களிக்கும் போது நாங்கள் பொத்தானை அழுத்தியவுடன் இந்த உத்தரவாதங்களுக்கு நாங்கள் தகுதியுடையவர்கள் ”என்று கூறினார்

“நாங்கள் கரண்ட் பில் கட்ட மாட்டோம். எதுவாக இருந்தாலும், எங்களுக்கு 200 யூனிட் இலவச மின்சாரம் வழங்கப்படும் என்று வாக்குறுதி அளிக்கப்பட்டுள்ளது. ” என்று கொப்பளத்தைச் சேர்ந்த மற்றொருவர் கூறியுள்ளார்

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE