சில்மிஷம் செய்த இளைஞருக்கு செருப்படி கொடுத்த இளம்பெண்: பஸ்நிலையத்தில் பரபரப்பு

By KU BUREAU

பேருந்துக்காக நின்று கொண்டிருந்த போது பாலியல் துன்புறுத்தலில் ஈடுபட்ட இளைஞரை இளம்பெண் செருப்பால் அடித்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

கர்நாடகா மாநிலம், பெங்களூருவில் பெண்களுக்கு எதிரான வன்முறை நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. இதனால் பணிக்குச் செல்லும் பெண்கள் அச்சத்துடன் வெளியே வர வேண்டிய நிலை ஏற்பட்டுள்ளதாக குற்றம் அவர்கள் சாட்டுகின்றனர். இந்த நிலையில், பேருந்துக்கு காத்திருந்த பெண்ணை துன்புறுத்திய இளைஞரை செருப்பால் அடித்து நொறுக்கிய சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

பெங்களூருவில் உள்ள விஜயபுரா பேருந்து நிலையத்தில் பேருந்துக்காக இளம்பெண் நேற்று மாலை காத்திருந்தார். அப்போது இளைஞர் ஒருவர், அந்த சிறுமியை கண்ணடித்து சில்மிஷம் செய்துள்ளார். அதன்பின் அந்த பெண்ணிடம் பாலியல் அத்துமீறிலில் ஈடுபட்டார். இதனால் ஆத்திரமடைந்த அந்த இளம்பெண், செருப்பால் அந்த இளைஞரை அடித்து நொறுக்கியுள்ளார். இதுகுறித்து தகவல் அறிந்த காந்தி சௌக் காவல் நிலைய போலீஸார், சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து இளைஞரை கைது செய்தனர். இந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE