சாத்தானை ஏவி விடுவேன்; பாடம் படிக்க வந்த சிறுவனை மிரட்டி பாலியல் தொல்லை: அரபு ஆசிரியருக்கு 20 ஆண்டு சிறை!

By காமதேனு

அரபு மொழி கற்க வந்த சிறுவனுக்கு பாலியல் தொல்லை கொடுத்த அரபு ஆசிரியருக்கு 20 ஆண்டு சிறைத் தண்டனை விதித்து சிவகங்கை போக்சோ நீதிமன்றம் தீர்ப்பு வழங்கியது.

சிவகங்கை மாவட்டம், இளையான்குடியில் இஸ்லாமிய சிறுவர்களுக்கு அரபு மொழி கற்றுதரப்பட்டு வருகிறது. அங்கு ராமநாதபுரம் மாவட்டம், தொண்டி சாலை வீரசிங்கமடத்தை சேர்ந்த சாகுல் ஹமீது அரபு ஆசிரியராக பணிபுரிந்து வருகிறார்.

கடந்த 2019-ம் ஆண்டு, அரபு மொழி பயில வந்த 12 வயது சிறுவன் மீது சாத்தானை ஏவி விடுவேன் என மிரட்டி அச்சிறுவனை பாலியல் தொல்லை செய்துள்ளார் சாகுல் ஹமீது. இதன் பின் சிறுவனின் புகாரில் ஆசிரியர் சாகுல் ஹமீதை சிவகங்கை மகளிர் போலீஸார் போக்சோ வழக்கில் கைது செய்தனர்.

இவ்வழக்கு போக்சோ சிறப்பு நீதிமன்ற நீதிபதி சரத்ராஜ் முன்னிலையில் விசாரணைக்கு வந்தது. இந்த வழக்கில் ஆசிரியர் சாகுல் ஹமீதுக்கு 20 ஆண்டு சிறைத் தண்டனை விதித்ததுடன், பாதிக்கப்பட்ட சிறுவனுக்கு அரசு 5 லட்சம் இழப்பீடு வழங்க உத்தரவிட்டும் தீர்ப்பு வழங்கினார் நீதிபதி.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE