நிலத்தகராறில் பட்டப்பகலில் ரவுடி வெட்டிக்கொலை: காரில் வந்த கும்பல் வெறிச்செயல்

By KU BUREAU

ஷிமோகா: நிலத்தகராறில் பட்டப்பகலில் ரவுடி வெட்டிக்கொலை செய்யப்பட்ட சம்பவம் ஷிமோகாவில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

கர்நாடகா மாநிலம், ஷிமோகா நகரின் வினோபா நகரைச் சேர்ந்தவர் ஹண்டி அனி(45). ஷிமோகாவில் பல்வேறு கொலை வழக்குகளில் குற்றம் சாட்டப்பட்ட ஹண்டி அனி, கடந்த 2006-ம் ஆண்டில் சகோதர்கள் இருவரை கொலை செய்ததாக குற்றம் சாட்டப்பட்டார். இந்த வழக்கில் தலைமறைவாக இருந்த அனி, ஒரு பத்திரிகையாளர் மூலம் சரணரடைந்தார். பின்னர் இந்த வழக்கை சந்தித்து விடுதலையானார். இதன்பின் வட்டி தொழிலில் ஈடுபட்டு வந்தார்.

இந்த நிலையில், ஷிமோகாவில் நிலத்தகராறு தொடர்பாக ரவுடி நவுலே ஆனந்திடம் அனி தகராறு செய்ததாக கூறப்படுகிறது. இதனால் அவர்களுக்குள் மோதல் ஏற்பட்டது. இப்பிரச்சினையில் இருந்து விலகிடுமாறு அனியை நவுலே எச்சரித்தாக கூறப்படுகிறது. இந்த நிலையில், காரில் வந்த 6 மர்மநபர்கள், ஹண்டி அனியை சரமாரியாக அரிவாளால் நேற்று வெட்டினர்.

இதில் சம்பவ இடத்திலேயே அவர் உயிரிழந்தார். இந்த கொலை தொடர்பாக வினோபா நகர் காவல் நிலைய போலீஸார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். நிலத்தகராறு தொடர்பாக ஹண்டி அனி கொலை செய்யப்பட்டிருக்கலாம் என்று போலீஸார் ச்ந்தேகப்படுகின்றனர். இது தொடர்பாக கொலையாள பகுதியில் இருந்த சிசிடிவி காட்சிகளை போலீஸார் ஆய்வு செய்து வருகின்றனர். பட்டப்பககில் ரவுடி வெட்டிக்கொலை செய்யப்பட்ட சம்பவம், அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE