டிஎன்பிஎஸ்சி குரூப் - 4 தேர்வு முடிவுகள் வெளியீடு

By காமதேனு

தமிழகம் முழுவதும் கடந்த ஜூலை 24-ம் தேதி நடத்தப்பட்ட டிஎன்பிஎஸ்சி குரூப் - 4 தேர்வு முடிவுகள் இன்று வெளியிடப்பட்டுள்ளது.

தமிழ்நாடு அரசின் கிராம நிர்வாக அலுவலர், இளநிலை உதவியாளர் உள்ளிட்ட 9,870 காலிப்பணியிடங்களுக்கான குரூப் 4 தேர்வுகள் கடந்த ஜூலை மாதம் நடைபெற்றது. இந்த தேர்வினை 18,36,535 எழுதி இருந்த நிலையில் தேர்வு முடிவுகள் வெளியாவதில் தாமதம் ஏற்பட்டது.

மார்ச் மாத இறுதிக்குள் தேர்வு முடிவுகள் வெளியிடப்படும் என அறிவிக்கப்பட்ட நிலையில் இன்று தேர்வு முடிவுகளை டிஎன்பிஎஸ்சி வெளியிட்டுள்ளது. http://tnpscexams.in/ என்ற இணையதளத்தில் பதிவெண் மற்றும் பிறந்த தேதியைப் பதிவு செய்து முடிவுகளைத் தெரிந்துக் கொள்ளலாம் என அறிவிக்கப்பட்டுள்ளது.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE