அரசு மருத்துவமனை ஐசியூவில் பெண் பாலியல் பலாத்காரம்: வெறிபிடித்த மருத்துவமனை ஊழியர் கைது

By காமதேனு

கேரளாவில் அறுவை சிகிச்சை முடிந்து தீவிர சிகிச்சைப் பிரிவில்(ஐசியூ) மயக்கத்தில் இருந்த பெண்ணை மருத்துவமனை ஊழியர் பாலியல் பலாத்காரம் செய்துள்ள சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

கேரளா மாநிலம் கோழிக்கோட்டைச் சேர்ந்த பெண் அங்குள்ள அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் சிகிச்சைக்குச் சென்றுள்ளார். அங்கு அவரை மருத்துவர்கள் பரிசோதனை செய்த போது அறுவை சிகிச்சை செய்ய வேண்டும் என்று அறிவுறுத்தியுள்ளனர். இதனைத் தொடர்ந்து மருத்துவமனையில் அந்த பெண் அறுவை சிகிச்சை செய்ய சேர்ந்துள்ளார்.

கடந்த இரண்டு நாட்களுக்கு முன்பு அந்த பெண்ணுக்கு அறுவை சிகிச்சை செய்யப்பட்டு தீவிர சிகிச்சைப் பிரிவிற்கு(ஐசியூ) மாற்றப்பட்டார். அப்பணியில் மருத்துவமனை ஊழியர் சுசீந்திரன்(55) ஈடுபட்டார். அப்போது அந்த பெண் அரைமயக்கத்தில் இருந்துள்ளார். அவரை சுசீந்திரன் பாலியல் பலாத்காரம் செய்துள்ளார். தனக்கு நேர்ந்த கொடுமை குறித்து அப்பெண் அவரது கணவரிடம் கூறி அழுதுள்ளார்.

இதுகுறித்து தகவலறிந்த மருத்துவக் கல்லூரி நிர்வாகம் உடனடியாக போலீஸில் புகார் அளித்தது. மருத்துவமனையில் உள்ள காவல் நிலைய போலீஸார், சுசீந்திரனை நேற்றுகைது செய்தனர்

இந்த நிலையில், இச்சம்பவம் தொடர்பாக விசாரணை அறிக்கையைத் தாக்கல் செய்யுமாறு மருத்துவக்கல்லூரி டீனுக்கு கேரள சுகாதாரத்துறை அமைச்சர் வீணா ஜார்ஜ் உத்தரவிட்டுள்ளார். இதையடுத்து மருத்துவக் கல்லூரி உதவி ஆணையர் கே.சுதர்சன் தலைமையில் விசாரணை நடைபெற்று வருகிறது. மருத்துவமனை தீவிர சிகிச்சைப் பிரிவில் அனுமதிக்கப்பட்ட பெண், மருத்துவமனை ஊழியராலேயே பாலியல் பலாத்காரம் செய்யப்பட்ட சம்பவம் கேரளாவில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE