முஸ்லிம் வீடுகள், மசூதி மீது கல்வீச்சு தாக்குதல்: கர்நாடகாவில் 15 பேர் கைது

By காமதேனு

கர்நாடக மாநிலம் ஹாவேரியில் இன்று இந்து அமைப்பினர் நடத்திய பேரணியின் போது முஸ்லிம் வீடுகள் மற்றும் மசூதி மீது கற்கள் வீசி தாக்கப்பட்டன. இது தொடர்பாக இதுவரை 15 பேரை போலீஸார் கைது செய்துள்ளனர்.

கர்நாடகாவின் ஹவேரி மாவட்டத்தில் இந்து அமைப்புகள் மற்றும் குருபா சமூக அமைப்பினைச் சேர்ந்தவர்கள் புரட்சியாளர் சங்கொல்லி ராயண்ணா சிலையுடன் இன்று பைக் பேரணியில் ஈடுபட்டனர். இந்த ஊர்வலம் முஸ்லிம்கள் வசிப்பிடத்தைக் கடந்தபோது, ​வீடுகள் மற்றும் ஒரு மசூதி மீது சிலர் கற்களை வீசினர். இதனால் அப்பகுதியில் பதட்டம் ஏற்பட்டது. உடனடியாக 15 பேரை போலீஸார் கைது செய்து நிலைமையை கட்டுக்குள் கொண்டு வந்தனர்.

பைக் பேரணி அமைதியாக நடந்ததாகவும், ஆனால் ஒரு மசூதிக்கு அருகில் வந்தபோது சில மர்மநபர்கள் கற்களை வீசியதாகவும் ஹாவேரி காவல் கண்காணிப்பாளர் சிவக்குமார் தெரிவித்தார். அவர்,"ஊர்வலத்தின் போது முழுமையான போலீஸ் பாதுகாப்பு இருந்தது, அதனால் உடனடியாக நிலைமை கட்டுக்குள் கொண்டுவரப்பட்டது. மார்ச் 9 அன்று, இதேபோன்ற பேரணிக்கு முஸ்லிம் சமூகத்தைச் சேர்ந்த சிலர் இடையூறு செய்தனர். அது மக்களைத் தூண்டியிருக்கலாம்" என்றார்

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE