சாலையின் தடுப்பு சுவரில் மோதி விபத்திற்குள்ளான காருக்குள் இரண்டு ஆண்களுடன் இளம்பெண் ஒருவர் அரைநிர்வாண கோலத்தில் இருந்த சம்பவத்தின் வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.
உத்தரப்பிரதே மாநிலம், கான்பூர் மாவட்டம், ஜே.கே.சௌரா பகுதியில் வேகமாக வந்த கார் டிரைவடரில் மோதி சாலையில் சென்றவர்கள் மீது மோதியது. கார் விபத்துக்குள்ளானதும் அந்த பகுதியில் இருந்தவர்கள் உடனடியாக ஓடிச் சென்று காரில் இருந்தவர்களைக் காப்பாற்ற முற்பட்டனர். அப்போது காருக்குள் இரண்டு ஆண்களுடன், ஒரு பெண் நிர்வாண நிலையில் இருந்தார். அத்துடன் சில குழந்தைகளும் காருக்குள் இருந்துள்ளனர். இதைக் கண்ட பொதுமக்கள் அதிர்ச்சியடைந்தனர்.
காருக்குள் மதுபாட்டில்கள் இருந்த நிலையில், காரில் பெண்ணுடன் இளைஞர்கள் இருவரும் தகாத உறவில் இருந்த போது விபத்து ஏற்பட்டது தெரிய வந்தது. அப்போது காரில் இருந்த இளைஞர்கள், பொதுமக்களிடம் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர். இது தொடர்பான வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.
அந்த கார் மோதி ஒரு பெண், இரண்டு குழந்தைகள் காயமடைந்தனர். தகவல் அறிந்து விரைந்து சென்ற போலீஸாரிடம் அப்பகுதி மக்கள் புகார் அளித்தனர். இதனையடுத்து காயமடைந்தவர்களை மருத்துவமனைக்கு அனுப்பி வைத்த போலீஸார், மேலும், காரில் இருந்தவர்களை காவலில் எடுத்து மருத்துவப் பரிசோதனைககு உள்படுத்தி, அமைதிக்கு குந்தகம் விளைவித்ததாக அவர்கள் மீது வழக்குப்பதிவு செய்தனர்.
» கேரளாவில் நிலச்சரிவு: அனைத்து உதவிகளையும் மத்திய அரசு செய்யும் என மோடி உறுதி
» திரைப்பட தயாரிப்பாளர் ரவீந்தர் சந்திரசேகரன் வீட்டில் அமலாக்கத்துறை சோதனை
இதன்பின் அவர்களுக்கு அபராதம் விதித்து செல்ல அனுமதிக்கப்பட்டதாக தெரிகிறது. மருத்துவமனையில் இருந்து டிஸ்சார்ஜ் செய்யப்பட்ட காரில் இருந்த இளம்பெண் அவரது குடும்பத்தினரிடம் ஒப்படைக்கப்பட்டதாக போலீஸார் தெரிவித்தனர். காரில் இருந்த குழந்தைகள் குறித்து விவரம் எதுவும் தெரிவிக்கப்படவில்லை. இந்த விபத்து குறித்த வீடியோ வேகமாக பரவி வருவதால் அதிர்ச்சி ஏற்பட்டுள்ளது.